அவமானம்


அடிப்பட்ட நெஞ்சமோ
அழுதுக்கொண்டு நிற்கும்;
கலங்கிப்போனக் கண்களால்
பொங்கிவரும் வஞ்சம்!

மனம்விட்டுக் கதற
விரல் தேடும் முகம்;
துடித்துப்போன வார்த்தையால்
கறுத்துப்போகும் அகம்!

காய்ந்துப்போனக் கரங்கள்
மிரட்டிக்கொண்டு நிற்கும்;
மாய்ந்துப்போன மானத்தால்
மனம் கூனிக்குறுகித் தவிக்கும்!

குருதி வராமல்;
குத்துப்பட்டுக்கிடக்கும்;
வெட்டிவிடும் நாவினால்
குட்டுப்பட்டுத் தவிக்கும்!

கனமான மேனியும்
கைவிட்டுப்போகும்;
அவமானம் தாங்காமல்
துடித் துடித்துப்போகும்!

சொல்லும் அறிவுரையைச்
சுவற்றுக்குள்ளேச் சொல்லு;
தலைக்குனியச் செய்யும்
அறிவுரையைப் புறந்தள்ளு!

அடிப்பட்ட நெஞ்சமோ
அழுதுக்கொண்டு நிற்கும்;
கலங்கிப்போனக் கண்களால்
பொங்கிவரும் வஞ்சம்!

மனம்விட்டுக் கதற
விரல் தேடும் முகம்;
துடித்துப்போன வார்த்தையால்
கறுத்துப்போகும் அகம்!

காய்ந்துப்போனக் கரங்கள்
மிரட்டிக்கொண்டு நிற்கும்;
மாய்ந்துப்போன மானத்தால்
மனம் கூனிக்குறுகித் தவிக்கும்!

குருதி வராமல்;
குத்துப்பட்டுக்கிடக்கும்;
வெட்டிவிடும் நாவினால்
குட்டுப்பட்டுத் தவிக்கும்!

கனமான மேனியும்
கைவிட்டுப்போகும்;
அவமானம் தாங்காமல்
துடித் துடித்துப்போகும்!

சொல்லும் அறிவுரையைச்
சுவற்றுக்குள்ளேச் சொல்லு;
தலைக்குனியச் செய்யும்
அறிவுரையைப் புறந்தள்ளு!

No comments:

Post a Comment