தூக்கமருந்து..அழுது அழைக்கும்
உன் குரலுக்குப்
பதில் இல்லாமல்
தோல்வியுற்றேன்
தொலைப்பேசித் தேர்வில்!

வழிந்த உன் கண்ணீர்;
அடைத்துக்கொண்டது;
அழைத்துக்கொண்டது;
தொலைப்பேசியின்
துளைகள்!

முத்தமிடும் உன்
உதடுகளால்;
நனைந்துப்போனது
என் இமை!

நீ தூங்காததிற்குக் காரணம்
உன் அன்னைச்
சொல்லித்தான் தெரிந்தேன்!

உன் தூக்கத்திற்கு மருந்து;
உன் முதுகைத் தட்டும்
என் விரல்தான் என்பது;
உன்னை விட்டுப் பிரிந்தப்
பின்தான் உணர்ந்தேன்!


அழுது அழைக்கும்
உன் குரலுக்குப்
பதில் இல்லாமல்
தோல்வியுற்றேன்
தொலைப்பேசித் தேர்வில்!

வழிந்த உன் கண்ணீர்;
அடைத்துக்கொண்டது;
அழைத்துக்கொண்டது;
தொலைப்பேசியின்
துளைகள்!

முத்தமிடும் உன்
உதடுகளால்;
நனைந்துப்போனது
என் இமை!

நீ தூங்காததிற்குக் காரணம்
உன் அன்னைச்
சொல்லித்தான் தெரிந்தேன்!

உன் தூக்கத்திற்கு மருந்து;
உன் முதுகைத் தட்டும்
என் விரல்தான் என்பது;
உன்னை விட்டுப் பிரிந்தப்
பின்தான் உணர்ந்தேன்!

1 comment: