அணைக்கும் உறவுகள்
அனலாய் விழிகளில்;
சிலிர்த்து நிற்கும்
கைரேகைகளும்
நனைந்துப்போய்;
நிழற்படங்கள் நமுத்துப்போய்!
குழந்தையின்
எச்சில் சொட்டும் உதடும்;
விரல் தொடும் அழகும்;
கொடுத்த வைத்தக் கைப்பேசியைக்
கண்டு உறுமி நிற்கும் மனம்!
மாறி மாறி
ஆறுதல் சொல்லி;
மாதங்கள் ஓடி;
ஓய்ந்துப்போய் ஓரமாய்;
என்னையும்
உன்னையும் போல்!
படித்தக் கடிதங்களுக்கு
மீண்டும் விழி திரும்பும்;
வெடித்து நிற்கும்
இதயத்திற்கு மருந்தாய்;
கண்ணீர்துளிகள் அதன்
விருந்தாய்!
பிரிந்து வாடும் எனக்கு;
வரிந்துக் கட்டும்
வெள்ளிக்கிழமையில்
வெள்ளைக் கைலி மட்டும்
ஆறுதலாய்;
ஊர் வாசத்துடன்!
Tweet
வெள்ளைக் கையிலி அல்லது வெள்ளை வேட்டி எப்படி சொன்னாலும், இது நம் அடையாளம், நமது தாய்வீட்டு உணார்வு. கவி அருமை.
ReplyDelete