மற்றொருப் போதை


புகுந்துவிட்டச்
சின்னத்திரையால்;
விலகிவிட்ட உறவுகள்;
திரையைப் பார்த்து
இமையைக் கசக்கும்
மங்கைகள்;
அழும் தன் குழந்தைக்குக்
காரணத்தைக் கேட்காமல்
அதட்டல் மட்டும்
அவசரமாய்!

வயதைத் தொட்டுத்
திக்குத் தெரியா
இளமைக்குக்;
கட்டுப்போட்டுக்;
கட்டிப்போடப்;
போட்டிப் போடும்
வியாபாரக் காந்தங்கள்!

பசுமரத்து ஆணிகளுக்குப்;
பாசங்கள் பழமையாகி;
நேசங்கள் எரிச்சலாகித்;
துர்நாற்ற வார்த்தைகள்;
மணம் வீசும்
மழலையின் வாய்கள்
பாடல்களாய் தொளிக்க!  
முகம் மலர்ந்துப் பெற்றோர்கள்;
உறவினருக்கு ஆடிக்காட்டச்
சொல்லும் அவலம்!

மறைந்திருந்து முட்டித்தள்ளும்
அனாச்சாரங்கள் அங்குசமாய்
மனிதனுக்கு;
தனக்கேத் தெரியாமல்
தள்ளாடி விழும்
மற்றொருப் போதை!

புகுந்துவிட்டச்
சின்னத்திரையால்;
விலகிவிட்ட உறவுகள்;
திரையைப் பார்த்து
இமையைக் கசக்கும்
மங்கைகள்;
அழும் தன் குழந்தைக்குக்
காரணத்தைக் கேட்காமல்
அதட்டல் மட்டும்
அவசரமாய்!

வயதைத் தொட்டுத்
திக்குத் தெரியா
இளமைக்குக்;
கட்டுப்போட்டுக்;
கட்டிப்போடப்;
போட்டிப் போடும்
வியாபாரக் காந்தங்கள்!

பசுமரத்து ஆணிகளுக்குப்;
பாசங்கள் பழமையாகி;
நேசங்கள் எரிச்சலாகித்;
துர்நாற்ற வார்த்தைகள்;
மணம் வீசும்
மழலையின் வாய்கள்
பாடல்களாய் தொளிக்க!  
முகம் மலர்ந்துப் பெற்றோர்கள்;
உறவினருக்கு ஆடிக்காட்டச்
சொல்லும் அவலம்!

மறைந்திருந்து முட்டித்தள்ளும்
அனாச்சாரங்கள் அங்குசமாய்
மனிதனுக்கு;
தனக்கேத் தெரியாமல்
தள்ளாடி விழும்
மற்றொருப் போதை!

No comments:

Post a Comment