சுயமரியாதை


உள்ளே ஒளிந்து
விழிகளுக்குத் தெரியாமல்;
மறைந்துக்கொண்டு;
முகம் காட்டுவேன்!

என் அகம் கண்டுச்
சிலரின் முகம் சுளிக்கும்;
இனம் கண்டவரின்
இதயம் மட்டும்;
கனமாக இனிக்கும்!

கூன்விழுந்துப் பிறரின்
முட்டியைப் பார்ப்பவனுக்குக்;
கேலியாக இருக்கும்;
நிமிர்ந்து நின்று
எதிர் இருப்பவரின்
விழிகளைக் காண்பது!

வளைந்துக்கொடுக்க
முடியாததால்;
பிழைக்கத் தெரியாதவன்
பட்டங்கள் இலவசமாய்!

பிழைக்கத்
தெரியாவிட்டாலும்
உழைப்பதை எண்ணிப்
பரவசமாய் கண்கள் ஒளிரும்;
மனதிற்குள் சுருண்டுக்
கொண்டிருக்கும் என்னைச்
சுமக்கும் மனிதனுக்கு!

உள்ளே ஒளிந்து
விழிகளுக்குத் தெரியாமல்;
மறைந்துக்கொண்டு;
முகம் காட்டுவேன்!

என் அகம் கண்டுச்
சிலரின் முகம் சுளிக்கும்;
இனம் கண்டவரின்
இதயம் மட்டும்;
கனமாக இனிக்கும்!

கூன்விழுந்துப் பிறரின்
முட்டியைப் பார்ப்பவனுக்குக்;
கேலியாக இருக்கும்;
நிமிர்ந்து நின்று
எதிர் இருப்பவரின்
விழிகளைக் காண்பது!

வளைந்துக்கொடுக்க
முடியாததால்;
பிழைக்கத் தெரியாதவன்
பட்டங்கள் இலவசமாய்!

பிழைக்கத்
தெரியாவிட்டாலும்
உழைப்பதை எண்ணிப்
பரவசமாய் கண்கள் ஒளிரும்;
மனதிற்குள் சுருண்டுக்
கொண்டிருக்கும் என்னைச்
சுமக்கும் மனிதனுக்கு!

No comments:

Post a Comment