எங்கள் இரத்தம்


ஒளிந்துக்கொண்டதாய்
சொல்லி நீ உருவெடுத்தாய்;
எங்களைக் கருவறுத்தாய்;
கருவில் இடம் கொடுத்த
என் தாயை நீ சிறையெடுத்தாய்;
பின் உயிரெடுத்தாய்!

குடல் மட்டுமேக்
குடியிருக்கும் எங்கள்
சின்ன வயிறும் பசிக்குக்
கதறி அழ;
உணவு ஏதுமில்லை;
கொடுப்பதற்கு இங்கே
யாருமில்லை!

பரட்டைத் தலையும்;
பரதேசி என்றப் பட்டத்துடன்
நித்தமும் சுற்றிவர!
இடிந்த வீட்டிற்கு
முன்னே நாங்கள்
விட்டில் பூச்சியாய்
வீழ்ந்துக்கிடக்க;
கண்டுக்கொள்ளாத
உலகத்திற்கு இன்னும்
தீவிரவாதியாய் நான்!

திகட்டிப்போன
எங்கள் இரத்தங்கள்
ஈயிற்கும் எறும்பிற்கும்;
திகட்டாமல் அள்ளித்தரும்
ஆப்கானிஸ்தானியர்கள்
நாங்கள் அத்துமீறும்
இராணுவத்திற்கு மட்டும்!

ஒளிந்துக்கொண்டதாய்
சொல்லி நீ உருவெடுத்தாய்;
எங்களைக் கருவறுத்தாய்;
கருவில் இடம் கொடுத்த
என் தாயை நீ சிறையெடுத்தாய்;
பின் உயிரெடுத்தாய்!

குடல் மட்டுமேக்
குடியிருக்கும் எங்கள்
சின்ன வயிறும் பசிக்குக்
கதறி அழ;
உணவு ஏதுமில்லை;
கொடுப்பதற்கு இங்கே
யாருமில்லை!

பரட்டைத் தலையும்;
பரதேசி என்றப் பட்டத்துடன்
நித்தமும் சுற்றிவர!
இடிந்த வீட்டிற்கு
முன்னே நாங்கள்
விட்டில் பூச்சியாய்
வீழ்ந்துக்கிடக்க;
கண்டுக்கொள்ளாத
உலகத்திற்கு இன்னும்
தீவிரவாதியாய் நான்!

திகட்டிப்போன
எங்கள் இரத்தங்கள்
ஈயிற்கும் எறும்பிற்கும்;
திகட்டாமல் அள்ளித்தரும்
ஆப்கானிஸ்தானியர்கள்
நாங்கள் அத்துமீறும்
இராணுவத்திற்கு மட்டும்!

No comments:

Post a Comment