தலைவலி


கட்டுப்பட்ட நரம்புகள்
முட்டிக்கொண்டு நிற்கும்;
விண் விண்னென்றத்
வலியால் தோல்வியடையும்
எண்ணங்கள்!

கரம் தாங்கித்
தலைப்பிடிக்கும்;
விரல் கொண்டு
வர்ணம் தீட்டும்;

எதிரொலிக்கும்
வலியால்;
விழிக் கலங்கி நிற்கும்;
பாதை தெளிவாய்
தெரிந்தாலும் பார்வை
மட்டும் மண்ணைக் கவ்வும்!

கனமானச் சுமைகள்
கபாலத்தில்
கைவரிசைக் காட்ட;
நிஜமாகவேப் புரியாமல்
நிலைத் தடுமாறி நிற்க;
மருந்தென்று ஒன்று
தொண்டைக்குள் நீரோடுத்;
துணைப்போட்டுச் செல்ல;
குட்டிக் கர்ணம் போடும்
தலைவலியோ
விழுந்தடித்து ஓட!

வழக்கமான மருந்துகளால்
இணக்கமான நோய்;
கொண்டுவரும் வலிக்கு
இதுதான் தாய்!

கட்டுப்பட்ட நரம்புகள்
முட்டிக்கொண்டு நிற்கும்;
விண் விண்னென்றத்
வலியால் தோல்வியடையும்
எண்ணங்கள்!

கரம் தாங்கித்
தலைப்பிடிக்கும்;
விரல் கொண்டு
வர்ணம் தீட்டும்;

எதிரொலிக்கும்
வலியால்;
விழிக் கலங்கி நிற்கும்;
பாதை தெளிவாய்
தெரிந்தாலும் பார்வை
மட்டும் மண்ணைக் கவ்வும்!

கனமானச் சுமைகள்
கபாலத்தில்
கைவரிசைக் காட்ட;
நிஜமாகவேப் புரியாமல்
நிலைத் தடுமாறி நிற்க;
மருந்தென்று ஒன்று
தொண்டைக்குள் நீரோடுத்;
துணைப்போட்டுச் செல்ல;
குட்டிக் கர்ணம் போடும்
தலைவலியோ
விழுந்தடித்து ஓட!

வழக்கமான மருந்துகளால்
இணக்கமான நோய்;
கொண்டுவரும் வலிக்கு
இதுதான் தாய்!

No comments:

Post a Comment