தர்ஹா வழிக்கேடு


மின்னும் விளக்குகளும்
கண்ணைப் பறிக்க;
மேள தாளங்களும்
காதைக் கிழிக்க;
மூச்சி முட்டும் கூட்டத்தில்
முகம் சுளிக்க;
தடுமாறி வழிமாறி நடக்கும்
வழிபாடு!

மங்கையர் கூட்டம்
மனதை அள்ள;
எத்தனிக்கும் கரம்
இடுப்பைக் கிள்ள;
சிரித்துக்கொண்டு
ஓதுக்கித் தள்ள - இந்தக்
கொடுமையை எங்கேப்
போய் நான் சொல்ல!

நாற்றமெடுக்கும் குடியும்
நாராம்சமான இடியும்;
தோற்றுப்போகும் மாற்றானின்
திருவிழாவும்;
விழிப்பிதுங்கும் சாம்பிராணியில்
கப்ரு விழாவும்!

ஓரிறையை முழக்கமிட்டு;
அனாச்சாரங்களை ஒதுக்கிவிட்டு;
மாறிவிடு
மாற்றான் கொள்கையை விட்டு;
பாவத்திற்காக அழுதுவிடுக்
கண்ணீர் விட்டு!

மின்னும் விளக்குகளும்
கண்ணைப் பறிக்க;
மேள தாளங்களும்
காதைக் கிழிக்க;
மூச்சி முட்டும் கூட்டத்தில்
முகம் சுளிக்க;
தடுமாறி வழிமாறி நடக்கும்
வழிபாடு!

மங்கையர் கூட்டம்
மனதை அள்ள;
எத்தனிக்கும் கரம்
இடுப்பைக் கிள்ள;
சிரித்துக்கொண்டு
ஓதுக்கித் தள்ள - இந்தக்
கொடுமையை எங்கேப்
போய் நான் சொல்ல!

நாற்றமெடுக்கும் குடியும்
நாராம்சமான இடியும்;
தோற்றுப்போகும் மாற்றானின்
திருவிழாவும்;
விழிப்பிதுங்கும் சாம்பிராணியில்
கப்ரு விழாவும்!

ஓரிறையை முழக்கமிட்டு;
அனாச்சாரங்களை ஒதுக்கிவிட்டு;
மாறிவிடு
மாற்றான் கொள்கையை விட்டு;
பாவத்திற்காக அழுதுவிடுக்
கண்ணீர் விட்டு!

3 comments:

  1. உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது
    அவைகளை என் பேஸ்புக் பக்கத்திலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பகிர்ந்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
  2. சகோதரர் ஹாஜா அவர்களே,தாராளமாக நீங்கள் பகிர்ந்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. நன்றி சகோதரரே

    ReplyDelete