மாத்திரை..


வளர்ந்துவிட்ட
விஞ்ஞானத்தால்;
சுருங்கிவிட்ட உலகத்தில்;
பெருகிவிட்ட வியாதிகள்!

உடனடித் தீர்வுக்கு ஆயுதமாய்;
சக்திகள் சரணடைந்து;
வெள்ளை அணுக்கள்
வெள்ளைக் கொடிக்காட்டி;
ஆரோக்கியம் அடி மாடாய்!

செல்கள் சோர்ந்துப்போய்;
தமனிகள் தவழ்ந்து;
எதிர்ப்புச் சக்திகள்;
ஏமாற்றி;
விழித் தேடும்;
விரல் எடுக்க;
குடலுக்குக் கொண்டுச் செல்லத்
துணைக்கு நீரையும்;
கசப்பாய் இருந்தாலும்
கண்மூடி;
நாவும் வெட்கப்பட்டு
வெளியே வரும்!

இலக்கணங்களில்
இருக்க வேண்டியவை;
இயந்திர மயமான
வாழ்க்கையில்;
இயல்பாய் மாறிய;
மாறாத மாத்திரை!

வளர்ந்துவிட்ட
விஞ்ஞானத்தால்;
சுருங்கிவிட்ட உலகத்தில்;
பெருகிவிட்ட வியாதிகள்!

உடனடித் தீர்வுக்கு ஆயுதமாய்;
சக்திகள் சரணடைந்து;
வெள்ளை அணுக்கள்
வெள்ளைக் கொடிக்காட்டி;
ஆரோக்கியம் அடி மாடாய்!

செல்கள் சோர்ந்துப்போய்;
தமனிகள் தவழ்ந்து;
எதிர்ப்புச் சக்திகள்;
ஏமாற்றி;
விழித் தேடும்;
விரல் எடுக்க;
குடலுக்குக் கொண்டுச் செல்லத்
துணைக்கு நீரையும்;
கசப்பாய் இருந்தாலும்
கண்மூடி;
நாவும் வெட்கப்பட்டு
வெளியே வரும்!

இலக்கணங்களில்
இருக்க வேண்டியவை;
இயந்திர மயமான
வாழ்க்கையில்;
இயல்பாய் மாறிய;
மாறாத மாத்திரை!

1 comment:

  1. இரவு பத்தரை ஒலித்தும்,
    நித்திரை இல்லை;
    தூங்கா நகரங்களில்,
    தூக்கம் தொலைத்த;
    இயந்திர மனிதருக்கு,
    இயல்பாய் மாறிய,
    மாறாத மாத்திரை-கள்!!?-Asker

    ReplyDelete