பயணக் காசு..


இமைகள் நனைந்து;
இதயம் உடைந்து;
மூச்சோடுச் சேர்ந்து
மூக்கும் அழுது;
தள்ளாடும் நடையால்;
தடுமாறும் பாதை!

கதவோடு நானும்
கரைந்துக் கொண்டிருக்க;
ஈரமான விரல்களும்
இடுக்கில் நசிங்கி நிற்க;
பொத்தி அழும்
முந்தாணையும்
சூடேறிப்போக!

பெட்டிப்படுக்கையும்
புறப்பாட்டிற்கு நிற்க;
அடக்கமுடியா
அழுகையும்
அலறிக்கொண்டு வர;
தாங்கவேண்டிய உன்
தோள்களும் தூரமாய்!

புதுப்பெண் நான்
புத்தம் புது ஆடைகளுடன்;
உறவினர்கள் வந்துப்பார்க்க;
பார்க்க வேண்டிய நீயோ
பயணத்திற்குச் செல்ல!

பயணக் காசு என்று ;
கசங்கிப்போன ரூபாயைக்
கண்கொட்டாமல் காண;
உன் விரல் பட்ட
காகிதமும் மணம் வீச;
பூட்டிவைத்தேன்
இரும்புப்பெட்டியில் - என்
இதயத்தைப் போல்!

இமைகள் நனைந்து;
இதயம் உடைந்து;
மூச்சோடுச் சேர்ந்து
மூக்கும் அழுது;
தள்ளாடும் நடையால்;
தடுமாறும் பாதை!

கதவோடு நானும்
கரைந்துக் கொண்டிருக்க;
ஈரமான விரல்களும்
இடுக்கில் நசிங்கி நிற்க;
பொத்தி அழும்
முந்தாணையும்
சூடேறிப்போக!

பெட்டிப்படுக்கையும்
புறப்பாட்டிற்கு நிற்க;
அடக்கமுடியா
அழுகையும்
அலறிக்கொண்டு வர;
தாங்கவேண்டிய உன்
தோள்களும் தூரமாய்!

புதுப்பெண் நான்
புத்தம் புது ஆடைகளுடன்;
உறவினர்கள் வந்துப்பார்க்க;
பார்க்க வேண்டிய நீயோ
பயணத்திற்குச் செல்ல!

பயணக் காசு என்று ;
கசங்கிப்போன ரூபாயைக்
கண்கொட்டாமல் காண;
உன் விரல் பட்ட
காகிதமும் மணம் வீச;
பூட்டிவைத்தேன்
இரும்புப்பெட்டியில் - என்
இதயத்தைப் போல்!

No comments:

Post a Comment