மசக்கை நான்...உறுதியானதும்
உறுத்துகிறது மனது;
நெருக்கத்தில் நீ இல்லாத
குறையால் குடைந்தப்படி
குமட்டலுக்கான காரியத்தை
உன் காதில் கடிக்க;
ஒளித்திருக்கும் வெட்கத்தை
வெளிப்படுத்த - விழியோடு
விரலும் தேடியது கைப்பேசியை!

சிரிப்பு வெடிக்க
சிந்த வேண்டிய வார்த்தைகள்;
அழுதுப் புடைத்து...
உன் ஆறுதல் வார்த்தை
என் காதில் வீழும்வரை!

உன் பெருமூச்சின் வெப்பத்தில்
கைப்பேசியின் சூடு
காதை தொட - தொட முடியா
தூரத்தில் நீயும் நானும்!!

வெளிநாட்டில் நீ!!!


உறுதியானதும்
உறுத்துகிறது மனது;
நெருக்கத்தில் நீ இல்லாத
குறையால் குடைந்தப்படி
குமட்டலுக்கான காரியத்தை
உன் காதில் கடிக்க;
ஒளித்திருக்கும் வெட்கத்தை
வெளிப்படுத்த - விழியோடு
விரலும் தேடியது கைப்பேசியை!

சிரிப்பு வெடிக்க
சிந்த வேண்டிய வார்த்தைகள்;
அழுதுப் புடைத்து...
உன் ஆறுதல் வார்த்தை
என் காதில் வீழும்வரை!

உன் பெருமூச்சின் வெப்பத்தில்
கைப்பேசியின் சூடு
காதை தொட - தொட முடியா
தூரத்தில் நீயும் நானும்!!

வெளிநாட்டில் நீ!!!

ஆயுதமில்லா அறுவை சிகிச்சை…


குடிமகன்களுக்கு
ஊற்றியும் கொடுத்து;
விபத்துகளுக்கு வித்திட்டு;
ஓட்டாதே வாகனத்தை
மது போதையில்;
வசூலில் இலக்கு - புதிய
போக்குவரத்துக்கழக திட்டம்!

ஜனத்தொகையை
சலித்தெடுக்க;
ஜனரஞ்சகமான
சாரயத்தில்
வசூல் வேட்டை செய்யும்;
அரசாங்கம் விதிக்கும்
அற்புதமான புதிய
குடும்பக் கட்டுப்பாடு திட்டம்!

தள்ளாடும்
போதையில் - தரங்கெட்டு
கற்பழிப்பில் கயவர்கள்;

சண்டை சச்சரவுகளில்
மதியிழந்து மதுவினால்
மனித குலத்தை
மாசுப்படுத்தும் - புதிய
பூச்சிக்கொல்லி திட்டம்!

வசூலில் இலக்கு
நிர்ணயித்து – எல்லாரையும்
மதுவில் அழித்ததிற்கு பின்னே;
யாரும் இல்லா தமிழகத்தில்;
யாருக்கான வளர்ச்சி திட்டம்!

குடிமகன்களுக்கு
ஊற்றியும் கொடுத்து;
விபத்துகளுக்கு வித்திட்டு;
ஓட்டாதே வாகனத்தை
மது போதையில்;
வசூலில் இலக்கு - புதிய
போக்குவரத்துக்கழக திட்டம்!

ஜனத்தொகையை
சலித்தெடுக்க;
ஜனரஞ்சகமான
சாரயத்தில்
வசூல் வேட்டை செய்யும்;
அரசாங்கம் விதிக்கும்
அற்புதமான புதிய
குடும்பக் கட்டுப்பாடு திட்டம்!

தள்ளாடும்
போதையில் - தரங்கெட்டு
கற்பழிப்பில் கயவர்கள்;

சண்டை சச்சரவுகளில்
மதியிழந்து மதுவினால்
மனித குலத்தை
மாசுப்படுத்தும் - புதிய
பூச்சிக்கொல்லி திட்டம்!

வசூலில் இலக்கு
நிர்ணயித்து – எல்லாரையும்
மதுவில் அழித்ததிற்கு பின்னே;
யாரும் இல்லா தமிழகத்தில்;
யாருக்கான வளர்ச்சி திட்டம்!