ஒருபக்க நியாயம்..


உடையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத்
திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு
உரம் இட்டப் பின்னேப்
படித்தாண்டத் தோன்றாதா!

பார்வை மட்டும்தானே;
அழகைப் பார்க்கட்டும்;
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;

பசிக்கும் பார்வைக்கு
அணைப்போடச் சொல்லித்
திரைப்போடச் சொல்வது சிறையா!

மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன
உள்ளத்தை மீட்டெடுப்பதில்
என்ன தயக்கம்!

மற்றவர் அணிந்தால்
வாய் மணக்க உரைக்கும் 
ஒழுக்கமுறை என்று;
நாங்கள் அணிந்தால்
மட்டும் வாய் குரைக்கும்
அடக்கு முறையென்று!

உடையவர் காணும்
உடல் உறுப்பை;
அந்நியர் காண்பது சரியா;
அரித்தெடுக்கும் பார்வைக்காகத்
திரையிடச் சொல்வதுப் பிழையா!

விழிக் காணும் சருமம்
விரல் தொடத் தூண்டாதா;
உணர்ச்சிக்கு
உரம் இட்டப் பின்னேப்
படித்தாண்டத் தோன்றாதா!

பார்வை மட்டும்தானே;
அழகைப் பார்க்கட்டும்;
என விழிகளுக்கு
விருந்து வைப்பது முறையா;

பசிக்கும் பார்வைக்கு
அணைப்போடச் சொல்லித்
திரைப்போடச் சொல்வது சிறையா!

மரத்துப்போன மனதினால்
மரித்துப்போன வெட்கம்;
கறுத்துப் போன
உள்ளத்தை மீட்டெடுப்பதில்
என்ன தயக்கம்!

மற்றவர் அணிந்தால்
வாய் மணக்க உரைக்கும் 
ஒழுக்கமுறை என்று;
நாங்கள் அணிந்தால்
மட்டும் வாய் குரைக்கும்
அடக்கு முறையென்று!

5 comments:

  1. ஸலாம் சகோ யாசர்..
    அருமையான கவிதை தொகுப்பு ஹிஜாப் பற்றி..

    என்ன ஒன்று எத்தனை உரைத்தாலும் புரியாது அவர்களுக்கு...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  2. மிகவும் அருமையான கவிதை....

    ReplyDelete
  3. மொஹம்மது சித்திக்April 11, 2011 at 11:34 AM

    இத்தனையும் படித்த பின்பும் புரிவதில்லை அவர்களுக்கு , இதுதான் புதிராக உள்ளது எனக்கு !!!
    நல்ல படைப்பு :)

    ReplyDelete
  4. நல்ல கவிதை நன்பா

    ReplyDelete
  5. மிக அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் :)

    ReplyDelete