பகல் நேரம்
படுக்கையில் போக;
பசியெடுத்துப் படுக்கையில் போக;
புரண்டுப்படுத்து;
எழுவதா புரள்வதா என
அழுதுப் புலம்பும்
கண்களுக்கு ஆறுதல் சொல்லி;
நமச்சல் கொடுக்கும் தூக்கத்தோடு;
எரிச்சல் கொடுக்கும் இமையையும்
பிடித்துக் கொண்டு எழுவேன்!
எல்லோரும்
பணி முடிந்து;
தங்கும் அறையிற்குப்
படரும் நேரம்;
எழுந்துச் செல்வேன்
குளிக்க அழுதுச் செல்வேன்
இரவுப் பணியிற்காக!
விடியும் நேரம்
விழிகள் ஒளிந்துக் கொள்ள;
இரவு நேரம் பணியில்
உறவுக் கொள்ள;
சிரித்துப் பேச ஆளில்லாமல்;
சிந்திக்க நேரமில்லாமல்;
ஓய்வுக்குப் பித்துப் பிடித்து;
சத்துக்கள் சல்லடையாய்!
//விடியும் நேரம்
ReplyDeleteவிழிகள் ஒளிந்துக் கொள்ள;
இரவு நேரம் பணியில்
உறவுக் கொள்ள;
சிரித்துப் பேச ஆளில்லாமல்;
சிந்திக்க நேரமில்லாமல்;
ஓய்வுக்குப் பித்துப் பிடித்து;
சத்துக்கள் சல்லடையாய்!//
வரிகள் அனைத்தும் அருமை