அந்தோ பணத்திற்கு


வாய் விட்டு அழ
வயது தடுக்க;
விழிகள் நீரில்
நீச்சலடித்து
நீந்திச் செல்ல;
கைப்பேசிக் கனமாகி;
இதயம் ரணமாக;
என் குழந்தையின்
முனகல் என் மனதை
முட்டித்தள்ளும் போது!

அருகில் இல்லாமல்
போன இல்லாள்;
மென்மையானக் குரலில்
வன்மையான
வார்த்தைகளால்;
வழி மொழிவாள்;
வருவது எப்போது!
பிதுங்கி வரும்;
கண்ணீரைக் கண்களுக்கு;
அர்ப்பணம் செய்தேன்;
அந்தோ!பணத்திற்கு!

வாய் விட்டு அழ
வயது தடுக்க;
விழிகள் நீரில்
நீச்சலடித்து
நீந்திச் செல்ல;
கைப்பேசிக் கனமாகி;
இதயம் ரணமாக;
என் குழந்தையின்
முனகல் என் மனதை
முட்டித்தள்ளும் போது!

அருகில் இல்லாமல்
போன இல்லாள்;
மென்மையானக் குரலில்
வன்மையான
வார்த்தைகளால்;
வழி மொழிவாள்;
வருவது எப்போது!
பிதுங்கி வரும்;
கண்ணீரைக் கண்களுக்கு;
அர்ப்பணம் செய்தேன்;
அந்தோ!பணத்திற்கு!

1 comment: