விதவைஉணர்வு ஒட்டியிருக்க;
வயதோ மிச்சமிருக்க;
கட்டியக் கணவன்
காலாவதியாக;
இறுதிச் சொட்டுக்
கண்ணீரும் அமைதியாக;
அழுதுப்புலம்பி
ஆண்டுகள் ஓடினாலும்;
இன்னும் நான் விதவை;
இழுத்து மூடிக்கொண்டதுச்
சமுதாயம் கதவை!

ஆறுதல் சொல்லி
அணைக்கக் கரம் வந்தாலும்;
நொந்துப்போன மனதிற்கு
வந்துப்போகும் உறவுகள்;
காயத்திற்கு மருந்திடும்;
தழும்புகள் மட்டும் நீங்காமல்;
பல இரவுகள் நான் தூங்காமல்!

உணர்வுகளை
வாட்டும் நரம்புகள்
போட்டிப்போட;
நரைவிழுந்து நான்
தரையில் வீழும்வரை
இப்படியே என
எண்ணுகையிலே;

மார்க்கம் வந்து
மனதை முட்டியது;
மறுமணம் எனக்
கதவைத் தட்டியது;
அதன் பெயர்
இஸ்லாம் என்றது;
எளிமையான முறையில்
செழுமை என்றது;
என் இதயத்தைக்
கொள்ளைக் கொண்டது!

ஒடுக்கி வைத்தச்
சமுதாயம் எனைத்
துர்சகுனம் என்றது;
இஸ்லாம் மட்டுமே
அதைத் தகனம் செய்தது!

ஒளிந்திருக்கும் உண்மைகள்
பல இதிலுண்டு;
அதில் ஒன்றுள்ளது;
பெண்ணுரிமை என்றுள்ளது!


உணர்வு ஒட்டியிருக்க;
வயதோ மிச்சமிருக்க;
கட்டியக் கணவன்
காலாவதியாக;
இறுதிச் சொட்டுக்
கண்ணீரும் அமைதியாக;
அழுதுப்புலம்பி
ஆண்டுகள் ஓடினாலும்;
இன்னும் நான் விதவை;
இழுத்து மூடிக்கொண்டதுச்
சமுதாயம் கதவை!

ஆறுதல் சொல்லி
அணைக்கக் கரம் வந்தாலும்;
நொந்துப்போன மனதிற்கு
வந்துப்போகும் உறவுகள்;
காயத்திற்கு மருந்திடும்;
தழும்புகள் மட்டும் நீங்காமல்;
பல இரவுகள் நான் தூங்காமல்!

உணர்வுகளை
வாட்டும் நரம்புகள்
போட்டிப்போட;
நரைவிழுந்து நான்
தரையில் வீழும்வரை
இப்படியே என
எண்ணுகையிலே;

மார்க்கம் வந்து
மனதை முட்டியது;
மறுமணம் எனக்
கதவைத் தட்டியது;
அதன் பெயர்
இஸ்லாம் என்றது;
எளிமையான முறையில்
செழுமை என்றது;
என் இதயத்தைக்
கொள்ளைக் கொண்டது!

ஒடுக்கி வைத்தச்
சமுதாயம் எனைத்
துர்சகுனம் என்றது;
இஸ்லாம் மட்டுமே
அதைத் தகனம் செய்தது!

ஒளிந்திருக்கும் உண்மைகள்
பல இதிலுண்டு;
அதில் ஒன்றுள்ளது;
பெண்ணுரிமை என்றுள்ளது!

உன் விரல் படாமல்சிவக்காத
மருதாணியைக் காண்பித்து;
சிரித்துக்கொண்டே
நீ கேட்கும்போது;
சிவந்திருக்கு எனும்போதே;
சிவக்கும் உன் கன்னம்
சிரிப்பிலே!

நகை வாங்கத்
தொகையில்லை எனும்போது;
கண்ணாடி வளையல்களால்
கண் சிமிட்டிச் சொல்வாய்
இது போதும் இப்போது என்று!

முதல் பொத்தானில் இருந்து
இறுதி பொத்தான் வரை
என் சட்டை உன் விரல்
இடுக்கில் படும்பாடு;
இனிமேல் உன் விரல்
படாமல் என் மனம்
படாதப்பாடு!

இப்போதுத் தூரமாய்;
இதயம் பாரமாய்;
ஏங்கித் தவிக்கும் விழியும்;
தூக்கத்தைக் கெடுக்கும்
மன வலியும்;
மவுனமாய்!


சிவக்காத
மருதாணியைக் காண்பித்து;
சிரித்துக்கொண்டே
நீ கேட்கும்போது;
சிவந்திருக்கு எனும்போதே;
சிவக்கும் உன் கன்னம்
சிரிப்பிலே!

நகை வாங்கத்
தொகையில்லை எனும்போது;
கண்ணாடி வளையல்களால்
கண் சிமிட்டிச் சொல்வாய்
இது போதும் இப்போது என்று!

முதல் பொத்தானில் இருந்து
இறுதி பொத்தான் வரை
என் சட்டை உன் விரல்
இடுக்கில் படும்பாடு;
இனிமேல் உன் விரல்
படாமல் என் மனம்
படாதப்பாடு!

இப்போதுத் தூரமாய்;
இதயம் பாரமாய்;
ஏங்கித் தவிக்கும் விழியும்;
தூக்கத்தைக் கெடுக்கும்
மன வலியும்;
மவுனமாய்!

நிரந்தர வீடுஓடியப் பாதம்
ஓய்ந்துக் கிடக்க;
விழிகள் இரண்டும்
மிரண்டு நிற்க;
கொண்டாடிய மூச்சு
இப்போது மேனிக்குள்
அல்லாட;
சுற்றித் தவிக்கும்
உறவுகளின் அழுகை;
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைவிற்குச் செல்ல;
இறுதி நிமிடம்
எனை விட்டு
நீங்கத் தயாராக!

விடைப்பெறும் நேரத்தில்
விழிகள் ஏதோக்
கண்ணீரால் கதைக்க;
வாடகைக் கூட்டை
ஜடமாக்கி – ஆவி
நிரந்தர வீட்டை நோக்கி!


ஓடியப் பாதம்
ஓய்ந்துக் கிடக்க;
விழிகள் இரண்டும்
மிரண்டு நிற்க;
கொண்டாடிய மூச்சு
இப்போது மேனிக்குள்
அல்லாட;
சுற்றித் தவிக்கும்
உறவுகளின் அழுகை;
கொஞ்சம் கொஞ்சமாகத்
தொலைவிற்குச் செல்ல;
இறுதி நிமிடம்
எனை விட்டு
நீங்கத் தயாராக!

விடைப்பெறும் நேரத்தில்
விழிகள் ஏதோக்
கண்ணீரால் கதைக்க;
வாடகைக் கூட்டை
ஜடமாக்கி – ஆவி
நிரந்தர வீட்டை நோக்கி!

உலாவரும்ஏறியக் கட்டணத்தால்
கையைப் பிசைந்து நாங்கள்;
ஏற நினைத்தாலும்
ஏற்க மனமில்லாமல்
பேருந்து;
இப்படிப் படியில்லாமல்!

ஏறு ஏறு
என நடத்துனர்
கதைத்தது அரசாங்கத்தின்
காதிலும் விழுந்ததோ;
விலையும் ஏறி;
படியின் உயரமும் ஏறி!


ஏறியக் கட்டணத்தால்
கையைப் பிசைந்து நாங்கள்;
ஏற நினைத்தாலும்
ஏற்க மனமில்லாமல்
பேருந்து;
இப்படிப் படியில்லாமல்!

ஏறு ஏறு
என நடத்துனர்
கதைத்தது அரசாங்கத்தின்
காதிலும் விழுந்ததோ;
விலையும் ஏறி;
படியின் உயரமும் ஏறி!

செல்வந்தன்கிழிந்த ஓரமும்
அழுக்குச் சட்டையும்;
அடுத்த வேளை
உணவுண்டா அறியா!

காய்ந்துப்போனச்
சிகையும் வயிறும்;
நின்றுக் களைத்துப்போன
முதுகெலும்பும்
சிணுங்கிக்கொண்டுப்
படுக்கத் தேடும் இடம்;
சாலை ஓரமா;
இல்லை ஓரத்தில்
உள்ள மரமா நானறியா!

சோகத்திற்குச்
சுண்ணாம்பு அடித்து;
பறிக்கும் புன்னகைச்
செய்யும் நான்தான்
செல்வந்தன் இன்று!


கிழிந்த ஓரமும்
அழுக்குச் சட்டையும்;
அடுத்த வேளை
உணவுண்டா அறியா!

காய்ந்துப்போனச்
சிகையும் வயிறும்;
நின்றுக் களைத்துப்போன
முதுகெலும்பும்
சிணுங்கிக்கொண்டுப்
படுக்கத் தேடும் இடம்;
சாலை ஓரமா;
இல்லை ஓரத்தில்
உள்ள மரமா நானறியா!

சோகத்திற்குச்
சுண்ணாம்பு அடித்து;
பறிக்கும் புன்னகைச்
செய்யும் நான்தான்
செல்வந்தன் இன்று!

நீ வைத்தஊடல் கொண்டப் பிறகு;
அன்பில் ஊழல் இல்லாததால்
இதயம் தேடும் உனை;
சினம் கொண்ட
நிமிடத்தை எண்ணி
சினம் கொண்டு;
விழித் தேடும்
கைப்பேசியை!

ஒட்டியிருக்கும் ஈகோ
எட்டி நின்று சிரிக்கும்;
அழைப்புக் கொடுக்கும்
விரலைத் தடுக்கும்!

உளைச்சலில்
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!


ஊடல் கொண்டப் பிறகு;
அன்பில் ஊழல் இல்லாததால்
இதயம் தேடும் உனை;
சினம் கொண்ட
நிமிடத்தை எண்ணி
சினம் கொண்டு;
விழித் தேடும்
கைப்பேசியை!

ஒட்டியிருக்கும் ஈகோ
எட்டி நின்று சிரிக்கும்;
அழைப்புக் கொடுக்கும்
விரலைத் தடுக்கும்!

உளைச்சலில்
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!

குளிர்சாதனப் பெட்டிஓசோனை
ஓட்டையிட்டாலும்;
தவிர்க்கமுடியாச்
சாதனத்தில் ஒய்யாரமாய்;
முதன்மையில் நீயும்!

நாளில் கெட்டுப்போகும்
சாமன்களையெல்லாம்;
சாமான்யமாக
வாரத்திற்குக் கொண்டுச்சென்று;
என் வயிற்றில் அடிக்கிறாய்
ஆரோக்கியமின்மையால்!

மூச்சுத்திணற
பொருள் ஏற்றினாலும்;
குளு குளுவென நீ;
உனை அவசியத்திற்கு
வாங்கிய நானோ;
புவி வெப்பத்தால் சூடாகி!


ஓசோனை
ஓட்டையிட்டாலும்;
தவிர்க்கமுடியாச்
சாதனத்தில் ஒய்யாரமாய்;
முதன்மையில் நீயும்!

நாளில் கெட்டுப்போகும்
சாமன்களையெல்லாம்;
சாமான்யமாக
வாரத்திற்குக் கொண்டுச்சென்று;
என் வயிற்றில் அடிக்கிறாய்
ஆரோக்கியமின்மையால்!

மூச்சுத்திணற
பொருள் ஏற்றினாலும்;
குளு குளுவென நீ;
உனை அவசியத்திற்கு
வாங்கிய நானோ;
புவி வெப்பத்தால் சூடாகி!

காக்காநித்தம் உனைக் கண்டதால்
என்னவோ – நீ
சப்தமிட்டாலே;
ஒலிக்கொடுத்து;
ஓடிவருவேன் - உனைத்
துரத்த வருவேன்;
என் வீட்டுமாடியில்
காயும் வத்தலையும்
முறுக்கையும் காக்க!

பாலை வந்த
நாள் முதல் – உனைப்
பார்க்காததால் என்னவோ;
அழகாய் தெரிகிறாய்;
விட்டுவந்த சொந்தங்களை
தொட்டுப்பார்க்க
நினைப்பதுப்போல்;
அருகில் இல்லையென்றால்தான்
அதன் அருமை புரியும் போல..


நித்தம் உனைக் கண்டதால்
என்னவோ – நீ
சப்தமிட்டாலே;
ஒலிக்கொடுத்து;
ஓடிவருவேன் - உனைத்
துரத்த வருவேன்;
என் வீட்டுமாடியில்
காயும் வத்தலையும்
முறுக்கையும் காக்க!

பாலை வந்த
நாள் முதல் – உனைப்
பார்க்காததால் என்னவோ;
அழகாய் தெரிகிறாய்;
விட்டுவந்த சொந்தங்களை
தொட்டுப்பார்க்க
நினைப்பதுப்போல்;
அருகில் இல்லையென்றால்தான்
அதன் அருமை புரியும் போல..

சம்பள உயர்வாஒயாமல் ஓடி;
மூளையும் வாடி;
கற்பனைச் செய்யாத
அர்பணத்தைத் தந்து;
கணிணியிடம் விழிகளை
விற்பனைச் செய்து;
சரீரத்தை சாய்வு
நாற்காலியிடம்
குத்தகைக்கு விட்டு;
உழைப்பால் வந்தக்
களைப்பால்;
அதிகாரிகள் தரும் கடுப்பால்;
உதடுகள் வறண்டு
சிந்தனைகள் தளர்ந்து;
வேலைச் செய்தால்;
ஒத்த வரியால்;
மொத்த உழைப்பையும்
உலையில் போடும்
உயர் அதிகாரி;
இதுப் போதாது!

போதாதச் சமபளத்தை;
தோதாகக் கேட்டால்;
மொத்த வரியால்;
என் ஒத்த வரியை;
சாப்பிடுவார்;
புரிந்துக்கொண்டு நாம்
புறம் காட்டவேண்டும்;
வரும் ஆனால் வராது!ஒயாமல் ஓடி;
மூளையும் வாடி;
கற்பனைச் செய்யாத
அர்பணத்தைத் தந்து;
கணிணியிடம் விழிகளை
விற்பனைச் செய்து;
சரீரத்தை சாய்வு
நாற்காலியிடம்
குத்தகைக்கு விட்டு;
உழைப்பால் வந்தக்
களைப்பால்;
அதிகாரிகள் தரும் கடுப்பால்;
உதடுகள் வறண்டு
சிந்தனைகள் தளர்ந்து;
வேலைச் செய்தால்;
ஒத்த வரியால்;
மொத்த உழைப்பையும்
உலையில் போடும்
உயர் அதிகாரி;
இதுப் போதாது!

போதாதச் சமபளத்தை;
தோதாகக் கேட்டால்;
மொத்த வரியால்;
என் ஒத்த வரியை;
சாப்பிடுவார்;
புரிந்துக்கொண்டு நாம்
புறம் காட்டவேண்டும்;
வரும் ஆனால் வராது!

ஓடிய நாட்கள்வெட்கம் எனைத் திண்ண;
அக்கம் பக்கம் நண்பர்கள்
எனைச் செல்லமாய் கிள்ள;
புரியாதப் பூரிப்பு
புன்னகையாய் என்
உதட்டைக் கிழிக்க;
மணநாள் மணமாய்!

புதிய வரவு என்றாலும்
புரியாத உன் அன்பிற்கு;
வெளியே வெயிலைக்
காண வெட்கம் கொண்டு;
சுற்றிச் சுற்றி வருவேன்
வீட்டிற்குள்ளே!

ஓடிய நாட்கள்;
ஓரமாய் என்
காதுகளில் கதைக்க;
இதயம் பதைக்க;
நாள்காட்டி மெல்லமாய்
எனை விரல்காட்டிச் சிரிக்க!

தேம்பி அழும் உனைத்
தாங்கித் தழுவ முடியாமல்;
வீங்கியக் கண்ணோடு
வாசலில் நிற்க;
உறவுகள் என் சோகம்
துடைக்க மெல்லமாய் உரைக்கும்;
இதற்கு முன் கலங்காதக்
கண்ணா இது என்று!

சின்னதாய் சிரித்து;
பெரியதாய் அழுது;
உருப்படிகளைத் தூக்கிக்கொண்டு;
உன்னை விட்டு விட்டு!  


வெட்கம் எனைத் திண்ண;
அக்கம் பக்கம் நண்பர்கள்
எனைச் செல்லமாய் கிள்ள;
புரியாதப் பூரிப்பு
புன்னகையாய் என்
உதட்டைக் கிழிக்க;
மணநாள் மணமாய்!

புதிய வரவு என்றாலும்
புரியாத உன் அன்பிற்கு;
வெளியே வெயிலைக்
காண வெட்கம் கொண்டு;
சுற்றிச் சுற்றி வருவேன்
வீட்டிற்குள்ளே!

ஓடிய நாட்கள்;
ஓரமாய் என்
காதுகளில் கதைக்க;
இதயம் பதைக்க;
நாள்காட்டி மெல்லமாய்
எனை விரல்காட்டிச் சிரிக்க!

தேம்பி அழும் உனைத்
தாங்கித் தழுவ முடியாமல்;
வீங்கியக் கண்ணோடு
வாசலில் நிற்க;
உறவுகள் என் சோகம்
துடைக்க மெல்லமாய் உரைக்கும்;
இதற்கு முன் கலங்காதக்
கண்ணா இது என்று!

சின்னதாய் சிரித்து;
பெரியதாய் அழுது;
உருப்படிகளைத் தூக்கிக்கொண்டு;
உன்னை விட்டு விட்டு!  

முதிர்ச்சிநரைத்த முடிகள்
கதைகள் நூறு சொன்னாலும்;
கேட்கும் அப்பாவிகளாய்
பேரக்குழந்தைகள் மட்டும்;
புதைந்து இருக்கும்
பல்கலைக்கழகம் ஆயிரம்;
மேனிச் சுருக்கங்கள்
அனுபவங்களை
ஒளித்துக்கொண்டு;
ஒலிகள் குரலிலே
ஒளிந்துக்கொண்டு;
நாம் இளமையிற்காகப்
பெற்றப் பட்டம் முதுமை!


நரைத்த முடிகள்
கதைகள் நூறு சொன்னாலும்;
கேட்கும் அப்பாவிகளாய்
பேரக்குழந்தைகள் மட்டும்;
புதைந்து இருக்கும்
பல்கலைக்கழகம் ஆயிரம்;
மேனிச் சுருக்கங்கள்
அனுபவங்களை
ஒளித்துக்கொண்டு;
ஒலிகள் குரலிலே
ஒளிந்துக்கொண்டு;
நாம் இளமையிற்காகப்
பெற்றப் பட்டம் முதுமை!

பேஸ்புக்பெயரில் மட்டுமே
முகம் கொண்டு;
மெய்யா;பொய்யா என
முகம் கண்டு;
இனம் காண முடியா;
புதுவித நோய்!

நல்ல விசயங்கள்
பகிர்ந்தாலும்;
சாக்கடையின் மேல்
பறக்கும் கொசுக்களும்;
ஏமாந்துப் போகும்
அறிவாளிகளும் இங்கே!


பெயரில் மட்டுமே
முகம் கொண்டு;
மெய்யா;பொய்யா என
முகம் கண்டு;
இனம் காண முடியா;
புதுவித நோய்!

நல்ல விசயங்கள்
பகிர்ந்தாலும்;
சாக்கடையின் மேல்
பறக்கும் கொசுக்களும்;
ஏமாந்துப் போகும்
அறிவாளிகளும் இங்கே!

விலைவாசிபண வீக்கம் என்று;
எங்கள் பணப்பைகள்
சுருங்கிக் கொள்ள;
விலை உயர்வால்
கவலைக் கிளைகள் படற;
தோய்ந்த முகத்தால்
துன்பங்கள் தொடற;
அன்றாடத் தேவைகள்
திண்டாட்டமாக!

அத்தியாவசியப் பொருட்கள்
அரக்கவிலையில்;
இறக்கமே இல்லாமல் அரசு;
அரக்கன் நிலையில்;
ஏறியப் பொருட்களால்
என் வீட்டுக்கொல்லை;
காய்கறிகளால் செழிக்க;
பயிரிட்ட நான்
பணத்தைச் சேமிக்க;
சுயத்தொழிலால்
என் பக்கம் மெல்லமாய்
காற்று வீச!


பண வீக்கம் என்று;
எங்கள் பணப்பைகள்
சுருங்கிக் கொள்ள;
விலை உயர்வால்
கவலைக் கிளைகள் படற;
தோய்ந்த முகத்தால்
துன்பங்கள் தொடற;
அன்றாடத் தேவைகள்
திண்டாட்டமாக!

அத்தியாவசியப் பொருட்கள்
அரக்கவிலையில்;
இறக்கமே இல்லாமல் அரசு;
அரக்கன் நிலையில்;
ஏறியப் பொருட்களால்
என் வீட்டுக்கொல்லை;
காய்கறிகளால் செழிக்க;
பயிரிட்ட நான்
பணத்தைச் சேமிக்க;
சுயத்தொழிலால்
என் பக்கம் மெல்லமாய்
காற்று வீச!

மிதிவண்டி நான்அறியாத வயதில் உனை
அணைத்துக்கொண்டு
உன் தந்தை என் மீது
நகர்வலம்!

நடைப் பழகியக் காலத்தில்
உன் இடையைச் சுமந்து;
மூன்றுச் சக்கரமாய் நான்
ஊர்வலம்!

ஓடும் வயதில்
நீ ஓரமாய்;
குரங்குப்பெடல் போட்டு
கல்லுக்கும் முள்ளுக்கும்
நீ முத்தமிட்டக் காலம்!

பள்ளிக்குச் செல்லும்
காலம் அது;
பந்தயமிட்டு எனை
மிதித்து எடுப்பாய்;
வேகத்தில் அழுத்தி எடுப்பாய்!

மண் பட்டாலும்
மல்லுக்கு நின்று
சுத்தம் செய்தக் காலம்;
சுத்தமாய் நீ மறந்து;
இப்போது
ஆவியாகும்
எரிபொருளை நிரப்பி;
ஆவியாக்கி நிற்கிறாய்
உன் ஆரோக்கியத்தை;
தேமே என்று நான்
மூலையில் ஒதுங்கி ஒடுங்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஓரத்தை!


அறியாத வயதில் உனை
அணைத்துக்கொண்டு
உன் தந்தை என் மீது
நகர்வலம்!

நடைப் பழகியக் காலத்தில்
உன் இடையைச் சுமந்து;
மூன்றுச் சக்கரமாய் நான்
ஊர்வலம்!

ஓடும் வயதில்
நீ ஓரமாய்;
குரங்குப்பெடல் போட்டு
கல்லுக்கும் முள்ளுக்கும்
நீ முத்தமிட்டக் காலம்!

பள்ளிக்குச் செல்லும்
காலம் அது;
பந்தயமிட்டு எனை
மிதித்து எடுப்பாய்;
வேகத்தில் அழுத்தி எடுப்பாய்!

மண் பட்டாலும்
மல்லுக்கு நின்று
சுத்தம் செய்தக் காலம்;
சுத்தமாய் நீ மறந்து;
இப்போது
ஆவியாகும்
எரிபொருளை நிரப்பி;
ஆவியாக்கி நிற்கிறாய்
உன் ஆரோக்கியத்தை;
தேமே என்று நான்
மூலையில் ஒதுங்கி ஒடுங்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஓரத்தை!

கடன் அட்டைபார்த்தவைகளை எல்லாம்
வாங்க வைத்து;
தகுதிக்கு மீறி
ஆசைகளை வீங்கவைத்து;
மெல்லமாய் கடனை ஏறவைத்து;
தடுமாறி விழிகளைப்
பிதுங்கவைத்து;
வட்டியெனும் அரக்கனை
ஒளித்துக்கொண்டு;
ஒட்டிக்கொண்டிருக்கும்
அட்டைப்பூச்சி நான்!


பார்த்தவைகளை எல்லாம்
வாங்க வைத்து;
தகுதிக்கு மீறி
ஆசைகளை வீங்கவைத்து;
மெல்லமாய் கடனை ஏறவைத்து;
தடுமாறி விழிகளைப்
பிதுங்கவைத்து;
வட்டியெனும் அரக்கனை
ஒளித்துக்கொண்டு;
ஒட்டிக்கொண்டிருக்கும்
அட்டைப்பூச்சி நான்!

வயதாகிவிட்ட வயதுஒட்டியிருக்கும் காலத்தில்
உன் புகைப்படத்தைக்
கட்டிபிடித்துக்
கடல் கடந்து நான்;
மணம் முடித்து
மனதை மயானமாக்கி;
ஈரமான உன் 
விழிப்பட்ட ஈரம்
என் விரல்களில் இன்னும்;
கண்முன்னே!

வெட்ட
வெளிச்சமானச் செல்வம்
ஒளிந்திருப்பதாக எண்ணி;
தேடி வந்தேன் பாலைக்கு;
நாளைக்கு நாளைக்கு என்று
வருடமும் ஓடிவிட்டது;
வயதிற்கும் வயதாகிவிட்டது!

முறுக்கேறிய நரம்புகள்
அசந்துப்போய்;
உண்ர்ச்சிகள் அநாதையாகி;
உன் அருகில் நான்;
உண்டாக்கியக் காயங்கள்
நம் இதயத்தை
துண்டாக்கியதால்
மன்னிப்புக் கோருகிறேன்
கண்ணீருடன்;காதலுடன்!


ஒட்டியிருக்கும் காலத்தில்
உன் புகைப்படத்தைக்
கட்டிபிடித்துக்
கடல் கடந்து நான்;
மணம் முடித்து
மனதை மயானமாக்கி;
ஈரமான உன் 
விழிப்பட்ட ஈரம்
என் விரல்களில் இன்னும்;
கண்முன்னே!

வெட்ட
வெளிச்சமானச் செல்வம்
ஒளிந்திருப்பதாக எண்ணி;
தேடி வந்தேன் பாலைக்கு;
நாளைக்கு நாளைக்கு என்று
வருடமும் ஓடிவிட்டது;
வயதிற்கும் வயதாகிவிட்டது!

முறுக்கேறிய நரம்புகள்
அசந்துப்போய்;
உண்ர்ச்சிகள் அநாதையாகி;
உன் அருகில் நான்;
உண்டாக்கியக் காயங்கள்
நம் இதயத்தை
துண்டாக்கியதால்
மன்னிப்புக் கோருகிறேன்
கண்ணீருடன்;காதலுடன்!

மறதி நல்லதுமுட்டி நிற்கும் சினத்தால்;
குட்டிப் போட்டு நிற்கும்
வியர்வைத் துளிகள்
மேனியில்!
பெரும் விசயத்தைத்
தொலைத்து;
தொலைத்த விசயத்தைத்
தேடிக் களைத்து;
எனைத் திட்டித் தீர்க்கும்
மனிதக்கூட்டம்!

மறந்துவிட்டார்கள்
மறதி எனை;
சின்னச் சின்னக் கசப்புகளுக்கு
நான்தான் கசாயம் என்று!

மனிதனுக்கு
நினைவு மட்டுமே
நினைவில் நின்றால்;
வெறுப்பிற்கு இடம் போட்டு;
சண்டையிட்ட உறவுகளுக்கு
இடமில்லாமல் இருந்திருக்கும்
இதயத்தில்!

ஒத்துக்கொண்டு;
ஒதுக்குங்கள் இதயத்தின்
ஓரத்தில் சின்ன சின்ன
மறதி நல்லதென்று!


முட்டி நிற்கும் சினத்தால்;
குட்டிப் போட்டு நிற்கும்
வியர்வைத் துளிகள்
மேனியில்!
பெரும் விசயத்தைத்
தொலைத்து;
தொலைத்த விசயத்தைத்
தேடிக் களைத்து;
எனைத் திட்டித் தீர்க்கும்
மனிதக்கூட்டம்!

மறந்துவிட்டார்கள்
மறதி எனை;
சின்னச் சின்னக் கசப்புகளுக்கு
நான்தான் கசாயம் என்று!

மனிதனுக்கு
நினைவு மட்டுமே
நினைவில் நின்றால்;
வெறுப்பிற்கு இடம் போட்டு;
சண்டையிட்ட உறவுகளுக்கு
இடமில்லாமல் இருந்திருக்கும்
இதயத்தில்!

ஒத்துக்கொண்டு;
ஒதுக்குங்கள் இதயத்தின்
ஓரத்தில் சின்ன சின்ன
மறதி நல்லதென்று!

வாலிபத்தில் வழுக்கைகொட்டும் முடிக்கு
மனம் குட்டுப்பட்டு;
இளித்துப் பேசும்
உறவுகளின் நாவிற்கு
ஒட்டுப் போட்டு;
ஆரோக்கியக் குறைவிற்கு
வளைகுடா நீர் மீதுப்
பழிப்போட்டு;
தப்பித்துக் கொண்டாலும்
தலைமுடி தினந்தோறும்
தரையிற்கு!

கவலைப்பட்டால்
முடி கொட்டும்
கதைகள் மலையேறி;
முடி கொட்டுவதால்
கவலைப்பட்டு
மருந்துக் கடைப் படியேறி!

மருந்துகள் தேய்த்துத் தேய்த்து
விரல்கள் துவண்டுப்போய்;
அரித்தாலும் சொரிய
அச்சம் கொண்டு;
தடவிக்கொடுத்து
முடிக்கு மகுடம் சூட்டி;
காப்பாற்ற எத்தனிக்கும் மனம்;
திருமணம் முடியும் வரையாவது!


கொட்டும் முடிக்கு
மனம் குட்டுப்பட்டு;
இளித்துப் பேசும்
உறவுகளின் நாவிற்கு
ஒட்டுப் போட்டு;
ஆரோக்கியக் குறைவிற்கு
வளைகுடா நீர் மீதுப்
பழிப்போட்டு;
தப்பித்துக் கொண்டாலும்
தலைமுடி தினந்தோறும்
தரையிற்கு!

கவலைப்பட்டால்
முடி கொட்டும்
கதைகள் மலையேறி;
முடி கொட்டுவதால்
கவலைப்பட்டு
மருந்துக் கடைப் படியேறி!

மருந்துகள் தேய்த்துத் தேய்த்து
விரல்கள் துவண்டுப்போய்;
அரித்தாலும் சொரிய
அச்சம் கொண்டு;
தடவிக்கொடுத்து
முடிக்கு மகுடம் சூட்டி;
காப்பாற்ற எத்தனிக்கும் மனம்;
திருமணம் முடியும் வரையாவது!

வந்து விடுகிறேன்அழும் உன் குரலை
ஆழ் மனதில்
பிதைத்துவிட்டு;
இறுதியாய் உனை
ஒருமுறை
திரும்பிப்பார்த்து;
விரும்பிப்பார்த்து;
விடைபெற்றேன்;
நம் சோகத்திற்கு
வினா தந்தேன்!

சூடான உள்ளத்திற்குப்
போட்டியாய்;
வாட்டி எடுக்கும் வெயிலும்;
போட்டுப் புரட்டும்
உன் நினைவும் இங்கே!

வளைகுடாவில்
புது மாப்பிள்ளை
என எல்லோரும் நகைக்க – பின்
அனுபவம் கொண்டவர்கள்
புரிந்துக்கொண்டு எனை அணைக்க!

தனிமையோடுத் தள்ளாடி;
கண்ணீர்த் துளிகள்
தவணைமுறையில்
தினமும் தலையணையிற்கு;
இரவு முழுவதும்!


அழும் உன் குரலை
ஆழ் மனதில்
பிதைத்துவிட்டு;
இறுதியாய் உனை
ஒருமுறை
திரும்பிப்பார்த்து;
விரும்பிப்பார்த்து;
விடைபெற்றேன்;
நம் சோகத்திற்கு
வினா தந்தேன்!

சூடான உள்ளத்திற்குப்
போட்டியாய்;
வாட்டி எடுக்கும் வெயிலும்;
போட்டுப் புரட்டும்
உன் நினைவும் இங்கே!

வளைகுடாவில்
புது மாப்பிள்ளை
என எல்லோரும் நகைக்க – பின்
அனுபவம் கொண்டவர்கள்
புரிந்துக்கொண்டு எனை அணைக்க!

தனிமையோடுத் தள்ளாடி;
கண்ணீர்த் துளிகள்
தவணைமுறையில்
தினமும் தலையணையிற்கு;
இரவு முழுவதும்!