நீ வைத்தஊடல் கொண்டப் பிறகு;
அன்பில் ஊழல் இல்லாததால்
இதயம் தேடும் உனை;
சினம் கொண்ட
நிமிடத்தை எண்ணி
சினம் கொண்டு;
விழித் தேடும்
கைப்பேசியை!

ஒட்டியிருக்கும் ஈகோ
எட்டி நின்று சிரிக்கும்;
அழைப்புக் கொடுக்கும்
விரலைத் தடுக்கும்!

உளைச்சலில்
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!


ஊடல் கொண்டப் பிறகு;
அன்பில் ஊழல் இல்லாததால்
இதயம் தேடும் உனை;
சினம் கொண்ட
நிமிடத்தை எண்ணி
சினம் கொண்டு;
விழித் தேடும்
கைப்பேசியை!

ஒட்டியிருக்கும் ஈகோ
எட்டி நின்று சிரிக்கும்;
அழைப்புக் கொடுக்கும்
விரலைத் தடுக்கும்!

உளைச்சலில்
உழலும் போதே;
உன் அழைப்பு;
நான் செய்தப் பிழைக்கு;
நீ கேட்கும் மன்னிப்பு;
முற்றிப்போன என்
அறியாமைக்கு நீ
வைத்த முற்றுப்புள்ளி!

1 comment:

  1. விட்டு கொடுத்தல் தானே காதலுக்கு அழகு !!!!

    ReplyDelete