வந்து விடுகிறேன்அழும் உன் குரலை
ஆழ் மனதில்
பிதைத்துவிட்டு;
இறுதியாய் உனை
ஒருமுறை
திரும்பிப்பார்த்து;
விரும்பிப்பார்த்து;
விடைபெற்றேன்;
நம் சோகத்திற்கு
வினா தந்தேன்!

சூடான உள்ளத்திற்குப்
போட்டியாய்;
வாட்டி எடுக்கும் வெயிலும்;
போட்டுப் புரட்டும்
உன் நினைவும் இங்கே!

வளைகுடாவில்
புது மாப்பிள்ளை
என எல்லோரும் நகைக்க – பின்
அனுபவம் கொண்டவர்கள்
புரிந்துக்கொண்டு எனை அணைக்க!

தனிமையோடுத் தள்ளாடி;
கண்ணீர்த் துளிகள்
தவணைமுறையில்
தினமும் தலையணையிற்கு;
இரவு முழுவதும்!


அழும் உன் குரலை
ஆழ் மனதில்
பிதைத்துவிட்டு;
இறுதியாய் உனை
ஒருமுறை
திரும்பிப்பார்த்து;
விரும்பிப்பார்த்து;
விடைபெற்றேன்;
நம் சோகத்திற்கு
வினா தந்தேன்!

சூடான உள்ளத்திற்குப்
போட்டியாய்;
வாட்டி எடுக்கும் வெயிலும்;
போட்டுப் புரட்டும்
உன் நினைவும் இங்கே!

வளைகுடாவில்
புது மாப்பிள்ளை
என எல்லோரும் நகைக்க – பின்
அனுபவம் கொண்டவர்கள்
புரிந்துக்கொண்டு எனை அணைக்க!

தனிமையோடுத் தள்ளாடி;
கண்ணீர்த் துளிகள்
தவணைமுறையில்
தினமும் தலையணையிற்கு;
இரவு முழுவதும்!

2 comments:

  1. வலிகளை வார்த்தைகளில் குழைத்தது அருமை...
    பொய்களை களைந்த கவிதை

    ReplyDelete