ஓடிய நாட்கள்வெட்கம் எனைத் திண்ண;
அக்கம் பக்கம் நண்பர்கள்
எனைச் செல்லமாய் கிள்ள;
புரியாதப் பூரிப்பு
புன்னகையாய் என்
உதட்டைக் கிழிக்க;
மணநாள் மணமாய்!

புதிய வரவு என்றாலும்
புரியாத உன் அன்பிற்கு;
வெளியே வெயிலைக்
காண வெட்கம் கொண்டு;
சுற்றிச் சுற்றி வருவேன்
வீட்டிற்குள்ளே!

ஓடிய நாட்கள்;
ஓரமாய் என்
காதுகளில் கதைக்க;
இதயம் பதைக்க;
நாள்காட்டி மெல்லமாய்
எனை விரல்காட்டிச் சிரிக்க!

தேம்பி அழும் உனைத்
தாங்கித் தழுவ முடியாமல்;
வீங்கியக் கண்ணோடு
வாசலில் நிற்க;
உறவுகள் என் சோகம்
துடைக்க மெல்லமாய் உரைக்கும்;
இதற்கு முன் கலங்காதக்
கண்ணா இது என்று!

சின்னதாய் சிரித்து;
பெரியதாய் அழுது;
உருப்படிகளைத் தூக்கிக்கொண்டு;
உன்னை விட்டு விட்டு!  


வெட்கம் எனைத் திண்ண;
அக்கம் பக்கம் நண்பர்கள்
எனைச் செல்லமாய் கிள்ள;
புரியாதப் பூரிப்பு
புன்னகையாய் என்
உதட்டைக் கிழிக்க;
மணநாள் மணமாய்!

புதிய வரவு என்றாலும்
புரியாத உன் அன்பிற்கு;
வெளியே வெயிலைக்
காண வெட்கம் கொண்டு;
சுற்றிச் சுற்றி வருவேன்
வீட்டிற்குள்ளே!

ஓடிய நாட்கள்;
ஓரமாய் என்
காதுகளில் கதைக்க;
இதயம் பதைக்க;
நாள்காட்டி மெல்லமாய்
எனை விரல்காட்டிச் சிரிக்க!

தேம்பி அழும் உனைத்
தாங்கித் தழுவ முடியாமல்;
வீங்கியக் கண்ணோடு
வாசலில் நிற்க;
உறவுகள் என் சோகம்
துடைக்க மெல்லமாய் உரைக்கும்;
இதற்கு முன் கலங்காதக்
கண்ணா இது என்று!

சின்னதாய் சிரித்து;
பெரியதாய் அழுது;
உருப்படிகளைத் தூக்கிக்கொண்டு;
உன்னை விட்டு விட்டு!  

2 comments:

  1. வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete
  2. உங்கள் வரவுக்கு நன்றி;தொடர்ந்து உங்கள் வருகையும் உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பர் திண்டுகல் தனபாலன் அவர்களே.

    ReplyDelete