இடம் தாவிஇடம் தாவி வந்த;
இனம் புரியா
இனமொன்று கனமான
மனதுடன்;
விடயம் இல்லாமல்
தடையத்தைத்
தடவியப்படி;
ரணமான உள்ளம்
குணமாகாதா என
ஏங்கியப்படிச்
சற்றுத் தூங்கியப்படி;
பெருநாளுக்கு நீ எழுப்பாமல்
நான் எழுந்து குளித்து
நறுமணம் மணக்க;
வாழ்த்துக்கள் தெளிக்க;
சிரித்து நடந்தாலும்
சில்லென்று விழிகளின்
ஓரம் கொஞ்சம் ஈரமாய்!

சந்தோஷங்கள்
அலைப்பேசியில்
அறுவடைச் செய்ய;
அறுத்தெடுக்கும் குரல்;
அம்மாவின் ஈரக்குலை
என்ற ஒற்றைப் பாசச் சொல்!

என்ன ஆடை;
என்ன வண்ணம்;
கேட்டுக் கேட்டு;
செவிக்குப் புளித்தாலும்
இளித்துக் கொண்டே
மீண்டும் மீண்டும் கேட்கச்
சொல்லும் உறவுகளின்
உற்சாகத்தைக் கேட்டு;
மனம் குளிர!


இடம் தாவி வந்த;
இனம் புரியா
இனமொன்று கனமான
மனதுடன்;
விடயம் இல்லாமல்
தடையத்தைத்
தடவியப்படி;
ரணமான உள்ளம்
குணமாகாதா என
ஏங்கியப்படிச்
சற்றுத் தூங்கியப்படி;
பெருநாளுக்கு நீ எழுப்பாமல்
நான் எழுந்து குளித்து
நறுமணம் மணக்க;
வாழ்த்துக்கள் தெளிக்க;
சிரித்து நடந்தாலும்
சில்லென்று விழிகளின்
ஓரம் கொஞ்சம் ஈரமாய்!

சந்தோஷங்கள்
அலைப்பேசியில்
அறுவடைச் செய்ய;
அறுத்தெடுக்கும் குரல்;
அம்மாவின் ஈரக்குலை
என்ற ஒற்றைப் பாசச் சொல்!

என்ன ஆடை;
என்ன வண்ணம்;
கேட்டுக் கேட்டு;
செவிக்குப் புளித்தாலும்
இளித்துக் கொண்டே
மீண்டும் மீண்டும் கேட்கச்
சொல்லும் உறவுகளின்
உற்சாகத்தைக் கேட்டு;
மனம் குளிர!

1 comment:

  1. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

    கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


    **** ஆதாமின்டே மகன் அபு *****    .

    ReplyDelete