மறதி நல்லதுமுட்டி நிற்கும் சினத்தால்;
குட்டிப் போட்டு நிற்கும்
வியர்வைத் துளிகள்
மேனியில்!
பெரும் விசயத்தைத்
தொலைத்து;
தொலைத்த விசயத்தைத்
தேடிக் களைத்து;
எனைத் திட்டித் தீர்க்கும்
மனிதக்கூட்டம்!

மறந்துவிட்டார்கள்
மறதி எனை;
சின்னச் சின்னக் கசப்புகளுக்கு
நான்தான் கசாயம் என்று!

மனிதனுக்கு
நினைவு மட்டுமே
நினைவில் நின்றால்;
வெறுப்பிற்கு இடம் போட்டு;
சண்டையிட்ட உறவுகளுக்கு
இடமில்லாமல் இருந்திருக்கும்
இதயத்தில்!

ஒத்துக்கொண்டு;
ஒதுக்குங்கள் இதயத்தின்
ஓரத்தில் சின்ன சின்ன
மறதி நல்லதென்று!


முட்டி நிற்கும் சினத்தால்;
குட்டிப் போட்டு நிற்கும்
வியர்வைத் துளிகள்
மேனியில்!
பெரும் விசயத்தைத்
தொலைத்து;
தொலைத்த விசயத்தைத்
தேடிக் களைத்து;
எனைத் திட்டித் தீர்க்கும்
மனிதக்கூட்டம்!

மறந்துவிட்டார்கள்
மறதி எனை;
சின்னச் சின்னக் கசப்புகளுக்கு
நான்தான் கசாயம் என்று!

மனிதனுக்கு
நினைவு மட்டுமே
நினைவில் நின்றால்;
வெறுப்பிற்கு இடம் போட்டு;
சண்டையிட்ட உறவுகளுக்கு
இடமில்லாமல் இருந்திருக்கும்
இதயத்தில்!

ஒத்துக்கொண்டு;
ஒதுக்குங்கள் இதயத்தின்
ஓரத்தில் சின்ன சின்ன
மறதி நல்லதென்று!

3 comments:

 1. இந்த தலைப்பை யாருமே நினைத்து இருக்க முடியாது.......

  "வெறுப்பிற்கு இடம் போட்டு;
  சண்டையிட்ட உறவுகளுக்கு
  இடமில்லாமல் இருந்திருக்கும்
  இதயத்தில்!"
  உண்மையான வரிகள்.....
  மறதி மட்டும் இல்லை என்றால்...
  இந்த உலகில் சொந்தம் நட்பு எதுவும் இல்லாமல் எல்லோரும் தனித்து தான் நிற்க வேண்டும்....

  மறதி இ மேன்மை படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 2. கவிதையின் உள்ளடக்கத்தை தனித்துக் காட்டி அதனை அழகாக விமர்சனம் செய்த உங்களுக்கு நன்றி mums.

  ReplyDelete