உன் விரல் படாமல்சிவக்காத
மருதாணியைக் காண்பித்து;
சிரித்துக்கொண்டே
நீ கேட்கும்போது;
சிவந்திருக்கு எனும்போதே;
சிவக்கும் உன் கன்னம்
சிரிப்பிலே!

நகை வாங்கத்
தொகையில்லை எனும்போது;
கண்ணாடி வளையல்களால்
கண் சிமிட்டிச் சொல்வாய்
இது போதும் இப்போது என்று!

முதல் பொத்தானில் இருந்து
இறுதி பொத்தான் வரை
என் சட்டை உன் விரல்
இடுக்கில் படும்பாடு;
இனிமேல் உன் விரல்
படாமல் என் மனம்
படாதப்பாடு!

இப்போதுத் தூரமாய்;
இதயம் பாரமாய்;
ஏங்கித் தவிக்கும் விழியும்;
தூக்கத்தைக் கெடுக்கும்
மன வலியும்;
மவுனமாய்!


சிவக்காத
மருதாணியைக் காண்பித்து;
சிரித்துக்கொண்டே
நீ கேட்கும்போது;
சிவந்திருக்கு எனும்போதே;
சிவக்கும் உன் கன்னம்
சிரிப்பிலே!

நகை வாங்கத்
தொகையில்லை எனும்போது;
கண்ணாடி வளையல்களால்
கண் சிமிட்டிச் சொல்வாய்
இது போதும் இப்போது என்று!

முதல் பொத்தானில் இருந்து
இறுதி பொத்தான் வரை
என் சட்டை உன் விரல்
இடுக்கில் படும்பாடு;
இனிமேல் உன் விரல்
படாமல் என் மனம்
படாதப்பாடு!

இப்போதுத் தூரமாய்;
இதயம் பாரமாய்;
ஏங்கித் தவிக்கும் விழியும்;
தூக்கத்தைக் கெடுக்கும்
மன வலியும்;
மவுனமாய்!

2 comments:

 1. ஏங்கித் தவிக்கும் விழியும்;
  தூக்கத்தைக் கெடுக்கும்
  மன வலியும்;
  மவுனமாய்!--அருமை..அருமை...நன்றி நண்பரே!

  ReplyDelete
 2. உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.

  ReplyDelete