காக்கா



நித்தம் உனைக் கண்டதால்
என்னவோ – நீ
சப்தமிட்டாலே;
ஒலிக்கொடுத்து;
ஓடிவருவேன் - உனைத்
துரத்த வருவேன்;
என் வீட்டுமாடியில்
காயும் வத்தலையும்
முறுக்கையும் காக்க!

பாலை வந்த
நாள் முதல் – உனைப்
பார்க்காததால் என்னவோ;
அழகாய் தெரிகிறாய்;
விட்டுவந்த சொந்தங்களை
தொட்டுப்பார்க்க
நினைப்பதுப்போல்;
அருகில் இல்லையென்றால்தான்
அதன் அருமை புரியும் போல..


நித்தம் உனைக் கண்டதால்
என்னவோ – நீ
சப்தமிட்டாலே;
ஒலிக்கொடுத்து;
ஓடிவருவேன் - உனைத்
துரத்த வருவேன்;
என் வீட்டுமாடியில்
காயும் வத்தலையும்
முறுக்கையும் காக்க!

பாலை வந்த
நாள் முதல் – உனைப்
பார்க்காததால் என்னவோ;
அழகாய் தெரிகிறாய்;
விட்டுவந்த சொந்தங்களை
தொட்டுப்பார்க்க
நினைப்பதுப்போல்;
அருகில் இல்லையென்றால்தான்
அதன் அருமை புரியும் போல..

1 comment:

  1. "அருகில் இல்லையென்றால்தான்
    அதன் அருமை புரியும் போல.."

    அப்பட்டமான உண்மை வரிகள்....

    ReplyDelete