வாலிபத்தில் வழுக்கைகொட்டும் முடிக்கு
மனம் குட்டுப்பட்டு;
இளித்துப் பேசும்
உறவுகளின் நாவிற்கு
ஒட்டுப் போட்டு;
ஆரோக்கியக் குறைவிற்கு
வளைகுடா நீர் மீதுப்
பழிப்போட்டு;
தப்பித்துக் கொண்டாலும்
தலைமுடி தினந்தோறும்
தரையிற்கு!

கவலைப்பட்டால்
முடி கொட்டும்
கதைகள் மலையேறி;
முடி கொட்டுவதால்
கவலைப்பட்டு
மருந்துக் கடைப் படியேறி!

மருந்துகள் தேய்த்துத் தேய்த்து
விரல்கள் துவண்டுப்போய்;
அரித்தாலும் சொரிய
அச்சம் கொண்டு;
தடவிக்கொடுத்து
முடிக்கு மகுடம் சூட்டி;
காப்பாற்ற எத்தனிக்கும் மனம்;
திருமணம் முடியும் வரையாவது!


கொட்டும் முடிக்கு
மனம் குட்டுப்பட்டு;
இளித்துப் பேசும்
உறவுகளின் நாவிற்கு
ஒட்டுப் போட்டு;
ஆரோக்கியக் குறைவிற்கு
வளைகுடா நீர் மீதுப்
பழிப்போட்டு;
தப்பித்துக் கொண்டாலும்
தலைமுடி தினந்தோறும்
தரையிற்கு!

கவலைப்பட்டால்
முடி கொட்டும்
கதைகள் மலையேறி;
முடி கொட்டுவதால்
கவலைப்பட்டு
மருந்துக் கடைப் படியேறி!

மருந்துகள் தேய்த்துத் தேய்த்து
விரல்கள் துவண்டுப்போய்;
அரித்தாலும் சொரிய
அச்சம் கொண்டு;
தடவிக்கொடுத்து
முடிக்கு மகுடம் சூட்டி;
காப்பாற்ற எத்தனிக்கும் மனம்;
திருமணம் முடியும் வரையாவது!

2 comments:

  1. பாஸ், விக் என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டீர்களா, இல்லையேல் hair transplant...

    கவலைப் படாதீங்க, முடி கொட்டினால் ஆண்மை அதிகம் என்று எவனோ சொல்ல, இப்ப பெண்கள் சொட்டை தலை ஆண்களை தான் மனக்கிரார்கலாம்

    ReplyDelete
  2. நண்பர் சூர்யஜீவா அவர்களே,

    உங்க்கள் கருத்திற்கு மிக்க நன்றி. இயற்கையாக உள்ளதைப் போல் எதுவே ஆகாது பாஸ்.அதுவுமில்லாமல் விக், ஒட்டுமுடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படையில் தவறு என் அருமை நண்பா.சொட்டைத்தலை ஆணுக்கு ஆண்மை அதிகம் என்று கல்யாணம் ஆகாத யாரவது சொட்டைத்தலை சொல்லி இருப்பார்கள்.

    ReplyDelete