இதுவும் வறுமைகொழுத்தச் சொந்தங்கள்
இருந்தாலும்;
கொளுத்தும் தனிமையில்
உழலும் நான்
கொண்ட வறுமை!

சேமித்தப் பணத்தைச்
சோற்றுக்கும்;
சொகுசுக்கும்;
உனக்காக அனுப்பினாலும்;
உன் கையில்
ஒருக் குவளை நீர்
அருந்த முடியா
நான் அடையும் வறுமை!

வண்ணப் புகைப்படத்தில்
கன்னங் குழித் தோண்டி;
நீ பூரித்தாலும்;
உன் கை ரோமத்தைக்கூடத்
தீண்ட முடியா;
தீண்டா இயலாமை வறுமை!

ஏற்ற இறக்குத்துடன்
உன் குரல் என்
செவிகளில் கதறினாலும்;
ஆறுதல் சொல்ல;
உன் விழி கக்கும்
வியர்வையை
விரல் தொட்டுத் துடைக்க
முடியாமல் போன
என் அருமை வறுமை!


கொழுத்தச் சொந்தங்கள்
இருந்தாலும்;
கொளுத்தும் தனிமையில்
உழலும் நான்
கொண்ட வறுமை!

சேமித்தப் பணத்தைச்
சோற்றுக்கும்;
சொகுசுக்கும்;
உனக்காக அனுப்பினாலும்;
உன் கையில்
ஒருக் குவளை நீர்
அருந்த முடியா
நான் அடையும் வறுமை!

வண்ணப் புகைப்படத்தில்
கன்னங் குழித் தோண்டி;
நீ பூரித்தாலும்;
உன் கை ரோமத்தைக்கூடத்
தீண்ட முடியா;
தீண்டா இயலாமை வறுமை!

ஏற்ற இறக்குத்துடன்
உன் குரல் என்
செவிகளில் கதறினாலும்;
ஆறுதல் சொல்ல;
உன் விழி கக்கும்
வியர்வையை
விரல் தொட்டுத் துடைக்க
முடியாமல் போன
என் அருமை வறுமை!

1 comment:

  1. அன்பின் வறுமை..
    பாசத்தின் வறுமை...
    அனைத்தும் அருமை

    ReplyDelete