அவசரம்முரட்டுத்
தூக்கம் வந்தாலும் விரட்டும்
அலுவலக அழைப்பு;
பல் துலக்கவேப் பாரமாய்;
தூக்கம் விலகா
விழிகளோ ஏக்கமாய்;
கசங்கிய ஆடைகளுக்குக்
கைகளாலே இஸ்திரிச் செய்து;
ஓட்டமும் நடையுமாய்;
வியர்த்ததுப் பாதி;
மூச்சுப் பயிற்சி மீதி!முரட்டுத்
தூக்கம் வந்தாலும் விரட்டும்
அலுவலக அழைப்பு;
பல் துலக்கவேப் பாரமாய்;
தூக்கம் விலகா
விழிகளோ ஏக்கமாய்;
கசங்கிய ஆடைகளுக்குக்
கைகளாலே இஸ்திரிச் செய்து;
ஓட்டமும் நடையுமாய்;
வியர்த்ததுப் பாதி;
மூச்சுப் பயிற்சி மீதி!

ஆண் பெண் நட்புஉதடுகள் மறுத்தாலும்
உணர்வுகள்
கீறிட்டுச் செல்லும்;
எட்டிப்பார்த்து
எகிறிக்குதிக்கக் காத்திருக்கும்;
சந்தர்ப்பம் கிடைத்தால்
வியர்த்து இருக்கும்!

கற்பைக் கரைக்கும்
கண்பார்வையும்;
அணுக்களைச்
சூடேற்றும் அடுப்பா;
உறக்கம் கெடுக்கும்;
உரசலும் – கிறக்கம்
கொடுக்கும் தொடுதலும்
நட்பா! 


உதடுகள் மறுத்தாலும்
உணர்வுகள்
கீறிட்டுச் செல்லும்;
எட்டிப்பார்த்து
எகிறிக்குதிக்கக் காத்திருக்கும்;
சந்தர்ப்பம் கிடைத்தால்
வியர்த்து இருக்கும்!

கற்பைக் கரைக்கும்
கண்பார்வையும்;
அணுக்களைச்
சூடேற்றும் அடுப்பா;
உறக்கம் கெடுக்கும்;
உரசலும் – கிறக்கம்
கொடுக்கும் தொடுதலும்
நட்பா! 

மண்ணறை வேதனைகொழுத்தச்
செல்வத்தில் செழித்துக்
கொடுக்க மனமில்லையா;
வழங்கிய வாய்ப்பினை
கெடுத்து வணங்கவில்லையா;
இரக்கம் என்பதை
இதயத்தில் இருந்து
இறக்கிவைத்தவனா;
மது மாதுகளில் மூழ்கி
மதி இழந்தவனா!

இறுதி இடம் உனக்குண்டு;
தனிமைச் சிறை
தரையுண்டு;
அனைவரும் அழுது
அனாதையாய்
இருட்டறையில் நீ!

வினாவிற்கு
விடையில்லாமல்;
விழிகள் சொறுகி;
புடைத்த உன் எலும்புகள்
படைத்தவனால் நொறுக்கப்பட்டு;
படுகுழியில் பரிதாபமாய்!

முடிந்தப்பின்னே
முட்டிக்கொள்வதில்
பலனில்லை;
படைத்தவனைப் பயந்து
வாழ்ந்துக் கொண்டால்
பயமில்லை!


கொழுத்தச்
செல்வத்தில் செழித்துக்
கொடுக்க மனமில்லையா;
வழங்கிய வாய்ப்பினை
கெடுத்து வணங்கவில்லையா;
இரக்கம் என்பதை
இதயத்தில் இருந்து
இறக்கிவைத்தவனா;
மது மாதுகளில் மூழ்கி
மதி இழந்தவனா!

இறுதி இடம் உனக்குண்டு;
தனிமைச் சிறை
தரையுண்டு;
அனைவரும் அழுது
அனாதையாய்
இருட்டறையில் நீ!

வினாவிற்கு
விடையில்லாமல்;
விழிகள் சொறுகி;
புடைத்த உன் எலும்புகள்
படைத்தவனால் நொறுக்கப்பட்டு;
படுகுழியில் பரிதாபமாய்!

முடிந்தப்பின்னே
முட்டிக்கொள்வதில்
பலனில்லை;
படைத்தவனைப் பயந்து
வாழ்ந்துக் கொண்டால்
பயமில்லை!

இந்தியச் சுதந்திரத்தில் நாங்கள்உதிரம் சூடேறி;
பற்றி எரியும் சரித்திரத்தின்
பக்கங்களுக்குச் சொந்தக்காரன்;
மேனியின் சதையை
விதையாக்கி;
அந்நியன் ஆடையை
அந்தோ! தீயிற்கு இரையாக்கி;
முத்தமிட்டு மரணத்தை
முண்டியடித்து;
மண்ணைக் காக்க;
சுதந்திரப் போரை
புனிதப் போராக்கி;
புரட்சி செய்து – ஆங்கிலேயனை
மிரட்டிவைத்த சமூகம்;
இன்று தேசத்துரோகிகளாக
சித்தரிக்கும் அவலம்!

நாடி வெடிக்க;
உதடுத் துடிக்க;
வரலாறு உரைக்கும்;
நாங்கள் துரோகிகள் அல்ல;
சரித்திரத்தை மாற்றிப் பேசும்
மாந்தரின் இதயத்தைக்
கிழிக்க வேண்டும்;
எங்காவது ஒர் மூலையில்
உண்மை ஒட்டியிருக்கா என்று!


உதிரம் சூடேறி;
பற்றி எரியும் சரித்திரத்தின்
பக்கங்களுக்குச் சொந்தக்காரன்;
மேனியின் சதையை
விதையாக்கி;
அந்நியன் ஆடையை
அந்தோ! தீயிற்கு இரையாக்கி;
முத்தமிட்டு மரணத்தை
முண்டியடித்து;
மண்ணைக் காக்க;
சுதந்திரப் போரை
புனிதப் போராக்கி;
புரட்சி செய்து – ஆங்கிலேயனை
மிரட்டிவைத்த சமூகம்;
இன்று தேசத்துரோகிகளாக
சித்தரிக்கும் அவலம்!

நாடி வெடிக்க;
உதடுத் துடிக்க;
வரலாறு உரைக்கும்;
நாங்கள் துரோகிகள் அல்ல;
சரித்திரத்தை மாற்றிப் பேசும்
மாந்தரின் இதயத்தைக்
கிழிக்க வேண்டும்;
எங்காவது ஒர் மூலையில்
உண்மை ஒட்டியிருக்கா என்று!

கொல்லும் பயணம்கூடுவிட்டுக் கூடுப்பாய;
கூடை மட்டும்
தூக்கிக் கொண்டு;
கனமில்லாக் கடவுச்சீட்டைக்
கரம்பிடித்ததால்;
கனமானது மனம்;
கண்கள் குளமானதுத் தினம்!

அழுதுவடியும் அம்மாவும்;
அழுவதற்கேத்
தெம்பில்லா இல்லாளும்;
கூடி நிற்கும் உறவுகளும்;
வாசலில் நிற்கும்;
என் புன்னகைத் தோற்கும்!

மொழியில்லா மவுனமும்
விழிகளைக் கடக்க- சோகம்
தொண்டையை அடைக்க;
எட்டிப்பார்ப்பேன் மகிழுந்தின்
ஜன்னல்களை இறக்கியப்படி!

மெல்ல நகரும் வாகனமும்;
மென்று எனைக் கொல்ல;
அழுகை எனை வெல்ல;
மகிழுந்தின்;
கறுப்புக் கண்ணாடியை
வெறுப்பாய் நான் பார்க்க;
என் வீட்டு முகப்பு;
முழுவதாய் மறைய!

நசிந்துப்போன என் ஊர்
கடைத்தெருவும்;
அழகாய் ஜொலிக்க;
நண்பர்கள் கூட்டமொன்று;
கரம் அசைத்து – என்
மனதைப் பிழிய;
பொறுத்ததுப் போதும்
என் பொங்கி அழ!

எனக்கு மட்டும் எதற்கு என
என்னையே நொந்துக்கொள்ள;
எனைப்போலவே ஆங்காங்கே
அழுதுக்கொண்டுக் கண்களைப்
பிசைந்துக்கொண்டு ஒர் கூட்டம்!
விமான நிலையத்தில்!

சிரித்துக்கொண்டே;
சில்லறையைச் சேர்த்தக்
கூட்டமொன்று உறவுகளை
அணைத்தப்படி வருகைப் புரிய;
மெல்லப் பூரிப்பேன்;
இவர்கள் அழ இன்னும்
மாதம் இருக்கென்று!


கூடுவிட்டுக் கூடுப்பாய;
கூடை மட்டும்
தூக்கிக் கொண்டு;
கனமில்லாக் கடவுச்சீட்டைக்
கரம்பிடித்ததால்;
கனமானது மனம்;
கண்கள் குளமானதுத் தினம்!

அழுதுவடியும் அம்மாவும்;
அழுவதற்கேத்
தெம்பில்லா இல்லாளும்;
கூடி நிற்கும் உறவுகளும்;
வாசலில் நிற்கும்;
என் புன்னகைத் தோற்கும்!

மொழியில்லா மவுனமும்
விழிகளைக் கடக்க- சோகம்
தொண்டையை அடைக்க;
எட்டிப்பார்ப்பேன் மகிழுந்தின்
ஜன்னல்களை இறக்கியப்படி!

மெல்ல நகரும் வாகனமும்;
மென்று எனைக் கொல்ல;
அழுகை எனை வெல்ல;
மகிழுந்தின்;
கறுப்புக் கண்ணாடியை
வெறுப்பாய் நான் பார்க்க;
என் வீட்டு முகப்பு;
முழுவதாய் மறைய!

நசிந்துப்போன என் ஊர்
கடைத்தெருவும்;
அழகாய் ஜொலிக்க;
நண்பர்கள் கூட்டமொன்று;
கரம் அசைத்து – என்
மனதைப் பிழிய;
பொறுத்ததுப் போதும்
என் பொங்கி அழ!

எனக்கு மட்டும் எதற்கு என
என்னையே நொந்துக்கொள்ள;
எனைப்போலவே ஆங்காங்கே
அழுதுக்கொண்டுக் கண்களைப்
பிசைந்துக்கொண்டு ஒர் கூட்டம்!
விமான நிலையத்தில்!

சிரித்துக்கொண்டே;
சில்லறையைச் சேர்த்தக்
கூட்டமொன்று உறவுகளை
அணைத்தப்படி வருகைப் புரிய;
மெல்லப் பூரிப்பேன்;
இவர்கள் அழ இன்னும்
மாதம் இருக்கென்று!

பணி நீக்கம்பணி நீக்கம் என்று
பிணிச் சேர்ந்து;
பனி மூட்டமான
அலுவலில் இப்படித் தனியாக;

கலைக் கொஞ்சும் அகத்தில்
கவலைக் குடிக்கொள்ள;
கொத்திக் குதறக்
காத்திருக்கும் கடமை;

எதுவந்தப் போதும்
எதிர்கொள்ளத் தயார்
என உயர்க்குரல் கொடுத்தாலும்;
உயர் அழுத்தம் ஒன்று;
ஒன்றும் அறியாக்
குழந்தையாகச் சுற்றிக்கொண்டே
எங்கள் அருகில்;

பக்கபலமாகப் படிப்பிருந்தாலும்;
படியேறிப் பணிக் கேட்க;
பணி இடம் இல்லாததால்;
பணிவாக மீண்டும்
பழையப் பணிக்கே!


பணி நீக்கம் என்று
பிணிச் சேர்ந்து;
பனி மூட்டமான
அலுவலில் இப்படித் தனியாக;

கலைக் கொஞ்சும் அகத்தில்
கவலைக் குடிக்கொள்ள;
கொத்திக் குதறக்
காத்திருக்கும் கடமை;

எதுவந்தப் போதும்
எதிர்கொள்ளத் தயார்
என உயர்க்குரல் கொடுத்தாலும்;
உயர் அழுத்தம் ஒன்று;
ஒன்றும் அறியாக்
குழந்தையாகச் சுற்றிக்கொண்டே
எங்கள் அருகில்;

பக்கபலமாகப் படிப்பிருந்தாலும்;
படியேறிப் பணிக் கேட்க;
பணி இடம் இல்லாததால்;
பணிவாக மீண்டும்
பழையப் பணிக்கே!

பழையது இனியதுசிறு வயதில்
சில்மிஷம் செய்த;
ஒத்த வயதுச்
சுட்டி நண்பன்;
என்னை மாற்றி;
மாட்டி விட்டதால்;
சினத்தில் துவம்சம் செய்ய;
அம்சம் பொருந்திய
அன்னையின் அடிக்கு
நான் பலியாய்!

பள்ளிப் பருவத்தில்;
கிள்ளி விளையாடும்
அன்பு நண்பர்களால்;
தவறாகக் கணித்த;
கணக்கு வாத்தியாரின்
மெலிந்தப் பிரம்பால்
தடித்த என் தசைகளோடு;
படித்தாலும் அவருக்கு;
நான் மக்கு பிள்ளையாய்!

பழுத்த நினைவுகளை
நினைத்துப் பார்க்கையிலே;
நனையும் கண்கள்;
நண்பர்கள் சொல்லிச்
சிரிக்கையிலே!


சிறு வயதில்
சில்மிஷம் செய்த;
ஒத்த வயதுச்
சுட்டி நண்பன்;
என்னை மாற்றி;
மாட்டி விட்டதால்;
சினத்தில் துவம்சம் செய்ய;
அம்சம் பொருந்திய
அன்னையின் அடிக்கு
நான் பலியாய்!

பள்ளிப் பருவத்தில்;
கிள்ளி விளையாடும்
அன்பு நண்பர்களால்;
தவறாகக் கணித்த;
கணக்கு வாத்தியாரின்
மெலிந்தப் பிரம்பால்
தடித்த என் தசைகளோடு;
படித்தாலும் அவருக்கு;
நான் மக்கு பிள்ளையாய்!

பழுத்த நினைவுகளை
நினைத்துப் பார்க்கையிலே;
நனையும் கண்கள்;
நண்பர்கள் சொல்லிச்
சிரிக்கையிலே!

மார்க்கம்ஏற்றத்தாழ்வு இதில் இல்லை;
ஏற்றுக்கொண்டால் குறையில்லை;
ஐங்காலத் தொழுகையுண்டு;
ஏழ்மை விரட்ட ஜக்காத் உண்டு;
உன்னையறிய நோன்புண்டு;
ஒற்றுமைக் காண ஹஜ் உண்டு!

கடுமையானச் சட்டமுண்டுக்
கொடியவர்களுக்கு;
இனிமைச் செய்யும்
இரக்கமுண்டு வறியவர்களுக்கு!

கொன்றொழிக்கும் வட்டியைக்
கொன்றொழித்து;
மென்றுத்திண்ணும்
புறம்பேசுதைலைப்
புறம் தள்ளி;
தள்ளாட்டம் போடும்
மதுவிற்கு தடைப்போட்டு;
சீரழிக்கும் விபச்சாரத்தைச்
சீர்குலைத்து;
மனிதக்குலம் செழிக்க
மாமறைக் கொண்ட மார்க்கம்!


ஏற்றத்தாழ்வு இதில் இல்லை;
ஏற்றுக்கொண்டால் குறையில்லை;
ஐங்காலத் தொழுகையுண்டு;
ஏழ்மை விரட்ட ஜக்காத் உண்டு;
உன்னையறிய நோன்புண்டு;
ஒற்றுமைக் காண ஹஜ் உண்டு!

கடுமையானச் சட்டமுண்டுக்
கொடியவர்களுக்கு;
இனிமைச் செய்யும்
இரக்கமுண்டு வறியவர்களுக்கு!

கொன்றொழிக்கும் வட்டியைக்
கொன்றொழித்து;
மென்றுத்திண்ணும்
புறம்பேசுதைலைப்
புறம் தள்ளி;
தள்ளாட்டம் போடும்
மதுவிற்கு தடைப்போட்டு;
சீரழிக்கும் விபச்சாரத்தைச்
சீர்குலைத்து;
மனிதக்குலம் செழிக்க
மாமறைக் கொண்ட மார்க்கம்!

அயல்நாட்டு அகதிகொதிக்கும் இளமைக்கு
முள்வேலியிட்டு;
கொடுமையானத் தனிமைக்குத்
தாலாட்டுப்பாடி;
ஒடிந்துப்போன உன்
குரலுக்குப் பதில்
சொல்லத் தெரியாமல்;
அழுத்தம் கொடுக்கும்
நினைவுகளை
அணைத்துக்கொண்டு;
வியர்த்து இருக்கும்
விழிகளை இமைகளால்
போர்த்திக்கொண்டு;
கசியும் கண்ணீருக்கு
விரல்கள் ஆறுதல் சொல்லி;
கனமான இதயத்தோடு
கனவுகளோடுக் காத்திருக்கும்
அயல்நாட்டு அகதி!


கொதிக்கும் இளமைக்கு
முள்வேலியிட்டு;
கொடுமையானத் தனிமைக்குத்
தாலாட்டுப்பாடி;
ஒடிந்துப்போன உன்
குரலுக்குப் பதில்
சொல்லத் தெரியாமல்;
அழுத்தம் கொடுக்கும்
நினைவுகளை
அணைத்துக்கொண்டு;
வியர்த்து இருக்கும்
விழிகளை இமைகளால்
போர்த்திக்கொண்டு;
கசியும் கண்ணீருக்கு
விரல்கள் ஆறுதல் சொல்லி;
கனமான இதயத்தோடு
கனவுகளோடுக் காத்திருக்கும்
அயல்நாட்டு அகதி!

பலியாகும் பாலஸ்தீன்
எழுதி முடித்தப்
பக்கங்கள் எல்லாம்
எறும்பும் ஈயும் மொய்க்கும்;
காய்ந்துப்போனக் குருதியோப்
புகைப்படத்திற்கு இரக்கமாய்!

துளைத்தத் தோட்டாக்களும்;
விழுந்தக் குண்டுகளும்;
மிச்சமின்றிப் பதம்பார்க்க;
உலக மனிதநேயமோ
வெள்ளைப் பக்கங்களில்
மையினால் எங்களைத்
தடவிக்கொடுக்கும்;
அமைதி அமைதி என்று!எழுதி முடித்தப்
பக்கங்கள் எல்லாம்
எறும்பும் ஈயும் மொய்க்கும்;
காய்ந்துப்போனக் குருதியோப்
புகைப்படத்திற்கு இரக்கமாய்!

துளைத்தத் தோட்டாக்களும்;
விழுந்தக் குண்டுகளும்;
மிச்சமின்றிப் பதம்பார்க்க;
உலக மனிதநேயமோ
வெள்ளைப் பக்கங்களில்
மையினால் எங்களைத்
தடவிக்கொடுக்கும்;
அமைதி அமைதி என்று!

நல்ல வாழ்க்கைஇல்லாததை நினைத்து ஏங்கி;
இருப்பனைக் கண்டு
மூளை வீங்கி;
எட்டி நிற்கும் கவலையைக்
கட்டிப்பிடிப்பதை நிறுத்து;
தீயதைத் தூர விட்டு;
நன்மையை தூவி விட்டு;
முகம் மலற
புன்னகைச் செய்!

மனம் முழுவதும்;
மணம் வீசி;
அழுக்கான மனதைக்
குப்பைக்கு வீசி;
மீண்டும் வாராத
வாழ்க்கையை;
மீள முடியா வாழ்க்கையிற்காக
முதலீடுச் செய்!
பொறாமை; பெறாமை
வேண்டும் என பிரார்தனைச் செய்!

தலைப்புத் தந்தவர்:


RIFASA
South Eastern University of Sri Lanka
Faculty of Applied Science


இல்லாததை நினைத்து ஏங்கி;
இருப்பனைக் கண்டு
மூளை வீங்கி;
எட்டி நிற்கும் கவலையைக்
கட்டிப்பிடிப்பதை நிறுத்து;
தீயதைத் தூர விட்டு;
நன்மையை தூவி விட்டு;
முகம் மலற
புன்னகைச் செய்!

மனம் முழுவதும்;
மணம் வீசி;
அழுக்கான மனதைக்
குப்பைக்கு வீசி;
மீண்டும் வாராத
வாழ்க்கையை;
மீள முடியா வாழ்க்கையிற்காக
முதலீடுச் செய்!
பொறாமை; பெறாமை
வேண்டும் என பிரார்தனைச் செய்!

தலைப்புத் தந்தவர்:


RIFASA
South Eastern University of Sri Lanka
Faculty of Applied Science

உன் தாய்மசக்கையில்,
நாற்றமும் குமட்டி;
துர்நாற்றமும் குமட்டி;
பேச்சு சப்தங்கள்
சங்கடமாய்;
முகச் சுளிப்புச்
சாதாரணமாய்;
புரியாத எரிச்சல்
என்னைத் தொற்றிக்கொள்ள;
புரிந்திருக்கும் எனக்கு
காரணம் நீதான் என்று!

முட்டிவிட்டு;
என் வயிற்றை
முட்டிக்கொண்டு – நீ
எட்டி உதைப்பதைத்
தொட்டுப்பார்த்து – என்
ரோமங்கள் எழுந்து
ஆர்பரிக்கும்;
சிலிர்த்தச் செல்கள்
அடங்க மறுக்கும்!

எதை உண்டாலும்;
எதிர்த்துத் தள்ளும்
குடலை வார்த்தையால்
சலித்துவிட்டு;
மீண்டும் உனக்காக
உண்பேன்!

முழுவதாய் உனைப்
பெறும் போது;
முழு மயக்கத்தில்
இருப்பேனோ –இல்லை;
அரை மயக்கத்தில் கிடப்பேனோ;
படாதப் பாடுப்படுத்தும்
உனைச் செல்லமாய் கிள்ளி;
சன்னமாய் சிரிக்கக்
காத்திருக்கும் உன் தாய்!


தலைப்புத் தந்தவர்:RIFASA
South Eastern University of Sri Lanka
Faculty of Applied Science


மசக்கையில்,
நாற்றமும் குமட்டி;
துர்நாற்றமும் குமட்டி;
பேச்சு சப்தங்கள்
சங்கடமாய்;
முகச் சுளிப்புச்
சாதாரணமாய்;
புரியாத எரிச்சல்
என்னைத் தொற்றிக்கொள்ள;
புரிந்திருக்கும் எனக்கு
காரணம் நீதான் என்று!

முட்டிவிட்டு;
என் வயிற்றை
முட்டிக்கொண்டு – நீ
எட்டி உதைப்பதைத்
தொட்டுப்பார்த்து – என்
ரோமங்கள் எழுந்து
ஆர்பரிக்கும்;
சிலிர்த்தச் செல்கள்
அடங்க மறுக்கும்!

எதை உண்டாலும்;
எதிர்த்துத் தள்ளும்
குடலை வார்த்தையால்
சலித்துவிட்டு;
மீண்டும் உனக்காக
உண்பேன்!

முழுவதாய் உனைப்
பெறும் போது;
முழு மயக்கத்தில்
இருப்பேனோ –இல்லை;
அரை மயக்கத்தில் கிடப்பேனோ;
படாதப் பாடுப்படுத்தும்
உனைச் செல்லமாய் கிள்ளி;
சன்னமாய் சிரிக்கக்
காத்திருக்கும் உன் தாய்!


தலைப்புத் தந்தவர்:RIFASA
South Eastern University of Sri Lanka
Faculty of Applied Science

முடியல..


களைப்பார நான்
கண்கள் மூடினால்;
என்னோடு நீ
கண்ணாமூச்சி ஆட;
மூட்டை முடிச்சுடன்
பாலையில் குடி வந்திருக்கும்
என் மூட்டையோடு மூட்டையாக!

இரத்தம் உறிஞ்சும்
வளைகுடாவில்;
என் நித்திரையிலும்
நித்தம் நீ
இரத்தம் உறிய;
இரத்தத்தானம் மறந்த எனக்கு;
நீ கற்றுக்கொடுக்கும் பாடம்!

மருந்து வைத்தாலும்
மயக்கிச் செல்கிறாய்;
ஒதுங்கிப்படுத்தாலும்
உறவாட வருகிறாய்;
அலுத்துப்போன எனக்கு;
உன்னோடுச் சண்டையிடத்
திராணியில்லை – உன்
சத்துக்கு நான் தீனியில்லை!

களைப்பார நான்
கண்கள் மூடினால்;
என்னோடு நீ
கண்ணாமூச்சி ஆட;
மூட்டை முடிச்சுடன்
பாலையில் குடி வந்திருக்கும்
என் மூட்டையோடு மூட்டையாக!

இரத்தம் உறிஞ்சும்
வளைகுடாவில்;
என் நித்திரையிலும்
நித்தம் நீ
இரத்தம் உறிய;
இரத்தத்தானம் மறந்த எனக்கு;
நீ கற்றுக்கொடுக்கும் பாடம்!

மருந்து வைத்தாலும்
மயக்கிச் செல்கிறாய்;
ஒதுங்கிப்படுத்தாலும்
உறவாட வருகிறாய்;
அலுத்துப்போன எனக்கு;
உன்னோடுச் சண்டையிடத்
திராணியில்லை – உன்
சத்துக்கு நான் தீனியில்லை!

எங்கே சிரிப்பு


அவசர உலகத்தில்
அவசரச் சிகிச்சைப் பிரிவில்;
உலகத்தின் ஓட்டத்திற்கு
ஒத்துப்போய் ஓடுவதால்
ஓரமானதுச் சிரிப்பு;

முதுகோடு உறவாடும்
நாற்காலியும்;
விழியோடு வழிந்து நிற்கும்
கணிணியும் களவாடியது
நம் நேரத்தை!

அவசர உலகத்தில்
அவசரச் சிகிச்சைப் பிரிவில்;
உலகத்தின் ஓட்டத்திற்கு
ஒத்துப்போய் ஓடுவதால்
ஓரமானதுச் சிரிப்பு;

முதுகோடு உறவாடும்
நாற்காலியும்;
விழியோடு வழிந்து நிற்கும்
கணிணியும் களவாடியது
நம் நேரத்தை!

இரவு இன்று


நனைந்துப்போன என்
விழிகளுக்கு;
விரல்களால்
ஆறுதல் சொல்லி;
உறவுகளிடம்
புன்னகைத்துவிட்டு;
உன் மனதை
புடைத்துவிட்டு;
மீண்டும் களம் காண;
கால்கள் மெல்ல நடக்க!

விம்மி அழ முடியாமல்
விமானத்தில்;
பறக்கும் போதும்;
உன் நினைவுகளில்
சிறகடிக்க - பாலையின்
சூடானக் காற்றிலும்
சுரணையில்லாமல்
நடைப்போட!

ஒற்றைப் படுக்கையில்;
ஓரமாய் தலையணையில்
கண்ணீரோடுச் சண்டையிட;
வழமையான இரவுகள்
இன்று பாரமாய்!

நனைந்துப்போன என்
விழிகளுக்கு;
விரல்களால்
ஆறுதல் சொல்லி;
உறவுகளிடம்
புன்னகைத்துவிட்டு;
உன் மனதை
புடைத்துவிட்டு;
மீண்டும் களம் காண;
கால்கள் மெல்ல நடக்க!

விம்மி அழ முடியாமல்
விமானத்தில்;
பறக்கும் போதும்;
உன் நினைவுகளில்
சிறகடிக்க - பாலையின்
சூடானக் காற்றிலும்
சுரணையில்லாமல்
நடைப்போட!

ஒற்றைப் படுக்கையில்;
ஓரமாய் தலையணையில்
கண்ணீரோடுச் சண்டையிட;
வழமையான இரவுகள்
இன்று பாரமாய்!

பசிஎதைக் கொடுத்தாலும்
உதடுகளை இறுக்கிக்கொண்டு;
பசியில்லை என;
பாதம் இரண்டும் பறக்க;
ஒடுகிறான் என் பிள்ளையென்று;
மருத்துவ மனைக்கு;
பசிக்கு மருந்துக் கேட்டு;
படியேறும் தாய்மார்கள்
ஒருக்கூட்டம்!

மருந்து ஏதுமுண்டா;
பசி மரக்க;
பசி எடுக்காமலிருக்க என
உருகி நிற்கும்
குழந்தையைத் தழுவி;
ஏக்கத்தோடு நிற்கும்
தாய்மார்கள் ஒருக் கூட்டம்!

நடைக்குத் தடைச் சொல்லி;
குடலைக் குறுக்கி;
முதுகெலும்பை வளைக்கும்;
பசியை உணர்ந்து
பரிமாறு ஏழைக்கு;
ஒட்டிய வயிறு;
ஒரு தடவை வந்து;
எட்டிப்பார்த்து பூரிக்கட்டும்
நம் மனிதநேயத்தை!


எதைக் கொடுத்தாலும்
உதடுகளை இறுக்கிக்கொண்டு;
பசியில்லை என;
பாதம் இரண்டும் பறக்க;
ஒடுகிறான் என் பிள்ளையென்று;
மருத்துவ மனைக்கு;
பசிக்கு மருந்துக் கேட்டு;
படியேறும் தாய்மார்கள்
ஒருக்கூட்டம்!

மருந்து ஏதுமுண்டா;
பசி மரக்க;
பசி எடுக்காமலிருக்க என
உருகி நிற்கும்
குழந்தையைத் தழுவி;
ஏக்கத்தோடு நிற்கும்
தாய்மார்கள் ஒருக் கூட்டம்!

நடைக்குத் தடைச் சொல்லி;
குடலைக் குறுக்கி;
முதுகெலும்பை வளைக்கும்;
பசியை உணர்ந்து
பரிமாறு ஏழைக்கு;
ஒட்டிய வயிறு;
ஒரு தடவை வந்து;
எட்டிப்பார்த்து பூரிக்கட்டும்
நம் மனிதநேயத்தை!