இரவு இன்று


நனைந்துப்போன என்
விழிகளுக்கு;
விரல்களால்
ஆறுதல் சொல்லி;
உறவுகளிடம்
புன்னகைத்துவிட்டு;
உன் மனதை
புடைத்துவிட்டு;
மீண்டும் களம் காண;
கால்கள் மெல்ல நடக்க!

விம்மி அழ முடியாமல்
விமானத்தில்;
பறக்கும் போதும்;
உன் நினைவுகளில்
சிறகடிக்க - பாலையின்
சூடானக் காற்றிலும்
சுரணையில்லாமல்
நடைப்போட!

ஒற்றைப் படுக்கையில்;
ஓரமாய் தலையணையில்
கண்ணீரோடுச் சண்டையிட;
வழமையான இரவுகள்
இன்று பாரமாய்!

நனைந்துப்போன என்
விழிகளுக்கு;
விரல்களால்
ஆறுதல் சொல்லி;
உறவுகளிடம்
புன்னகைத்துவிட்டு;
உன் மனதை
புடைத்துவிட்டு;
மீண்டும் களம் காண;
கால்கள் மெல்ல நடக்க!

விம்மி அழ முடியாமல்
விமானத்தில்;
பறக்கும் போதும்;
உன் நினைவுகளில்
சிறகடிக்க - பாலையின்
சூடானக் காற்றிலும்
சுரணையில்லாமல்
நடைப்போட!

ஒற்றைப் படுக்கையில்;
ஓரமாய் தலையணையில்
கண்ணீரோடுச் சண்டையிட;
வழமையான இரவுகள்
இன்று பாரமாய்!

5 comments:

  1. ஒற்றைப் படுக்கையில்;
    ஓரமாய் தலையணையில்
    கண்ணீரோடுச் சண்டையிட;
    வழமையான இரவுகள்
    இன்று பாரமாய்!//

    மிகவும் அருமையான வரிகள், எப்படி எழுதுறீங்க இப்படியெல்லாம் எனக்கும் சொல்லித்தாங்களேன்..

    ReplyDelete
  2. //பதியப்பட்டுள்ள அனைத்து கவிதைகளும் என்னால் எழுதப்பட்டவை.//
    இத சொன்னதால தான் சந்தேகமே வருது..

    ReplyDelete
  3. சூர்யாஜீவா அவர்களே; நான் எழுதியக் கவிதைகளை நான்தான் எழுதினேன் என்று என்னுடையத் தளத்தில் பதியவைத்ததால் உங்களுக்கு என் மீது சந்தேகம் வந்ததா? இதில் உள்ளக் கவிதைகள் நீங்களா எழுதியது என்று பல சகோதர சகோதிரிகள் என்னிடம் கேட்டக் காரணத்தினாலே இவ்வாறு வெளியிட்டு உள்ளேன்.

    ReplyDelete
  4. சும்மா தமாசுக்கு

    ReplyDelete