இந்தியச் சுதந்திரத்தில் நாங்கள்உதிரம் சூடேறி;
பற்றி எரியும் சரித்திரத்தின்
பக்கங்களுக்குச் சொந்தக்காரன்;
மேனியின் சதையை
விதையாக்கி;
அந்நியன் ஆடையை
அந்தோ! தீயிற்கு இரையாக்கி;
முத்தமிட்டு மரணத்தை
முண்டியடித்து;
மண்ணைக் காக்க;
சுதந்திரப் போரை
புனிதப் போராக்கி;
புரட்சி செய்து – ஆங்கிலேயனை
மிரட்டிவைத்த சமூகம்;
இன்று தேசத்துரோகிகளாக
சித்தரிக்கும் அவலம்!

நாடி வெடிக்க;
உதடுத் துடிக்க;
வரலாறு உரைக்கும்;
நாங்கள் துரோகிகள் அல்ல;
சரித்திரத்தை மாற்றிப் பேசும்
மாந்தரின் இதயத்தைக்
கிழிக்க வேண்டும்;
எங்காவது ஒர் மூலையில்
உண்மை ஒட்டியிருக்கா என்று!


உதிரம் சூடேறி;
பற்றி எரியும் சரித்திரத்தின்
பக்கங்களுக்குச் சொந்தக்காரன்;
மேனியின் சதையை
விதையாக்கி;
அந்நியன் ஆடையை
அந்தோ! தீயிற்கு இரையாக்கி;
முத்தமிட்டு மரணத்தை
முண்டியடித்து;
மண்ணைக் காக்க;
சுதந்திரப் போரை
புனிதப் போராக்கி;
புரட்சி செய்து – ஆங்கிலேயனை
மிரட்டிவைத்த சமூகம்;
இன்று தேசத்துரோகிகளாக
சித்தரிக்கும் அவலம்!

நாடி வெடிக்க;
உதடுத் துடிக்க;
வரலாறு உரைக்கும்;
நாங்கள் துரோகிகள் அல்ல;
சரித்திரத்தை மாற்றிப் பேசும்
மாந்தரின் இதயத்தைக்
கிழிக்க வேண்டும்;
எங்காவது ஒர் மூலையில்
உண்மை ஒட்டியிருக்கா என்று!

2 comments:

  1. புத்தகத்தில் போடப் பட்ட படம் சரியானது அல்ல, புத்தகத்தை நான் இன்னும் படிக்காததால் உள்ளே இருக்கும் கருத்தை பற்றி கூற முடியவில்லை...
    இந்திய சுதந்திரத்திற்க்காக முஸ்லிம்கள் பங்கு இன்றியமையாதது, எத்தனையோ தலைவர்கள் மிகவும் சிரமப் பட்டு உள்ளார்கள்... இவர்களின் பங்களிப்பை காங்கிரஸ் கட்சி வரலாற்று புத்தகங்களில் இடம் பெற வைக்காமல் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்துள்ளது... மன்னர்களின் கதைகள் பற்றி போடாமல் சுதந்திரத்திற்க்காக போராடிய நல்ல உள்ளங்களை பற்றி குறிப்பிட்டிருந்தால் இது தாமதமாக செயல் பட்ட காலத்தின் கட்டாயம் ஆகும்

    ReplyDelete
  2. மீண்டும் ஒரு முறை கண்ணியமான கருத்தை பதியவைத்த நண்பர் சூர்யாஜீவா அவர்களுக்கு நன்றி.இந்தப் படம் மலையாளத்தில் பதிவிடப்பட்ட புத்தகத்தின் அட்டைப்படம். இந்தப்படத்தைக் கொண்டு இன்னும் தமிழில் எதுவும் வெளிவரவில்லை. மேலும் அதில் எழுதி உள்ள தமிழ் வாசகம் நான் எழுதியது.

    ReplyDelete