பசிஎதைக் கொடுத்தாலும்
உதடுகளை இறுக்கிக்கொண்டு;
பசியில்லை என;
பாதம் இரண்டும் பறக்க;
ஒடுகிறான் என் பிள்ளையென்று;
மருத்துவ மனைக்கு;
பசிக்கு மருந்துக் கேட்டு;
படியேறும் தாய்மார்கள்
ஒருக்கூட்டம்!

மருந்து ஏதுமுண்டா;
பசி மரக்க;
பசி எடுக்காமலிருக்க என
உருகி நிற்கும்
குழந்தையைத் தழுவி;
ஏக்கத்தோடு நிற்கும்
தாய்மார்கள் ஒருக் கூட்டம்!

நடைக்குத் தடைச் சொல்லி;
குடலைக் குறுக்கி;
முதுகெலும்பை வளைக்கும்;
பசியை உணர்ந்து
பரிமாறு ஏழைக்கு;
ஒட்டிய வயிறு;
ஒரு தடவை வந்து;
எட்டிப்பார்த்து பூரிக்கட்டும்
நம் மனிதநேயத்தை!


எதைக் கொடுத்தாலும்
உதடுகளை இறுக்கிக்கொண்டு;
பசியில்லை என;
பாதம் இரண்டும் பறக்க;
ஒடுகிறான் என் பிள்ளையென்று;
மருத்துவ மனைக்கு;
பசிக்கு மருந்துக் கேட்டு;
படியேறும் தாய்மார்கள்
ஒருக்கூட்டம்!

மருந்து ஏதுமுண்டா;
பசி மரக்க;
பசி எடுக்காமலிருக்க என
உருகி நிற்கும்
குழந்தையைத் தழுவி;
ஏக்கத்தோடு நிற்கும்
தாய்மார்கள் ஒருக் கூட்டம்!

நடைக்குத் தடைச் சொல்லி;
குடலைக் குறுக்கி;
முதுகெலும்பை வளைக்கும்;
பசியை உணர்ந்து
பரிமாறு ஏழைக்கு;
ஒட்டிய வயிறு;
ஒரு தடவை வந்து;
எட்டிப்பார்த்து பூரிக்கட்டும்
நம் மனிதநேயத்தை!

No comments:

Post a Comment