அயல்நாட்டு அகதிகொதிக்கும் இளமைக்கு
முள்வேலியிட்டு;
கொடுமையானத் தனிமைக்குத்
தாலாட்டுப்பாடி;
ஒடிந்துப்போன உன்
குரலுக்குப் பதில்
சொல்லத் தெரியாமல்;
அழுத்தம் கொடுக்கும்
நினைவுகளை
அணைத்துக்கொண்டு;
வியர்த்து இருக்கும்
விழிகளை இமைகளால்
போர்த்திக்கொண்டு;
கசியும் கண்ணீருக்கு
விரல்கள் ஆறுதல் சொல்லி;
கனமான இதயத்தோடு
கனவுகளோடுக் காத்திருக்கும்
அயல்நாட்டு அகதி!


கொதிக்கும் இளமைக்கு
முள்வேலியிட்டு;
கொடுமையானத் தனிமைக்குத்
தாலாட்டுப்பாடி;
ஒடிந்துப்போன உன்
குரலுக்குப் பதில்
சொல்லத் தெரியாமல்;
அழுத்தம் கொடுக்கும்
நினைவுகளை
அணைத்துக்கொண்டு;
வியர்த்து இருக்கும்
விழிகளை இமைகளால்
போர்த்திக்கொண்டு;
கசியும் கண்ணீருக்கு
விரல்கள் ஆறுதல் சொல்லி;
கனமான இதயத்தோடு
கனவுகளோடுக் காத்திருக்கும்
அயல்நாட்டு அகதி!

3 comments:

  1. கொடுமை... கொடுமை..

    ReplyDelete
  2. கொடுமை வரிகளா அல்லது வலிகளா?

    ReplyDelete