மார்க்கம்ஏற்றத்தாழ்வு இதில் இல்லை;
ஏற்றுக்கொண்டால் குறையில்லை;
ஐங்காலத் தொழுகையுண்டு;
ஏழ்மை விரட்ட ஜக்காத் உண்டு;
உன்னையறிய நோன்புண்டு;
ஒற்றுமைக் காண ஹஜ் உண்டு!

கடுமையானச் சட்டமுண்டுக்
கொடியவர்களுக்கு;
இனிமைச் செய்யும்
இரக்கமுண்டு வறியவர்களுக்கு!

கொன்றொழிக்கும் வட்டியைக்
கொன்றொழித்து;
மென்றுத்திண்ணும்
புறம்பேசுதைலைப்
புறம் தள்ளி;
தள்ளாட்டம் போடும்
மதுவிற்கு தடைப்போட்டு;
சீரழிக்கும் விபச்சாரத்தைச்
சீர்குலைத்து;
மனிதக்குலம் செழிக்க
மாமறைக் கொண்ட மார்க்கம்!


ஏற்றத்தாழ்வு இதில் இல்லை;
ஏற்றுக்கொண்டால் குறையில்லை;
ஐங்காலத் தொழுகையுண்டு;
ஏழ்மை விரட்ட ஜக்காத் உண்டு;
உன்னையறிய நோன்புண்டு;
ஒற்றுமைக் காண ஹஜ் உண்டு!

கடுமையானச் சட்டமுண்டுக்
கொடியவர்களுக்கு;
இனிமைச் செய்யும்
இரக்கமுண்டு வறியவர்களுக்கு!

கொன்றொழிக்கும் வட்டியைக்
கொன்றொழித்து;
மென்றுத்திண்ணும்
புறம்பேசுதைலைப்
புறம் தள்ளி;
தள்ளாட்டம் போடும்
மதுவிற்கு தடைப்போட்டு;
சீரழிக்கும் விபச்சாரத்தைச்
சீர்குலைத்து;
மனிதக்குலம் செழிக்க
மாமறைக் கொண்ட மார்க்கம்!

2 comments:

  1. ஆனால் இதை கடை பிடிப்பவர் இங்கு யாரும் இல்லை, இதை ஒழுங்காக கடை பிடித்திருந்தால் உலகம் செழுமைப் பட்டிருக்கும்

    ReplyDelete
  2. ஒவ்வொரு கவிதையையும் படித்து/ரசித்து அதற்கு பின்னோட்டம் இடும் நண்பர் சூர்யாஜீவா அவர்களுக்கு மிக்க நன்றி. கடைப்பிடித்திருந்தால் உலகம் செழுமையாக இருக்கும் என்று சொல்வதின் மூலம் இஸ்லாம் கூறும் கருத்து அல்லது சட்டம் உண்மை(மனிதகுலத்திற்கு உகந்தது) என்பதை உணர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.கடைப்பிடிப்பவருக்கு அதற்கான சன்மானம் உண்டு;உணர்ந்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.உணராதவர்கள் சன்மானத்தை கோட்டைவிடுகிறார்கள்.

    ReplyDelete