புரோட்டாநீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

எங்களைக்
கொல்லாமல் கொல்ல;
புதுப் புது வியாதிகளை
நாங்கள் அள்ள!

புரியாத பாஷையில்
உனக்கு யார் வைத்தாரோ
பெயர் புரோட்டா;
கடை எழுத்துக்கள் மட்டும்
கண் முன்னே;
தின்றுக்கொழுத்தால்
நீ காட்டப்போவது எங்கள்
வாழ்விற்கு டா டா என்று!


தலைப்புத் தந்தவர்:
ஆரீஸ் முகம்மது - வடகரை (மாயவரம்) 


நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

எங்களைக்
கொல்லாமல் கொல்ல;
புதுப் புது வியாதிகளை
நாங்கள் அள்ள!

புரியாத பாஷையில்
உனக்கு யார் வைத்தாரோ
பெயர் புரோட்டா;
கடை எழுத்துக்கள் மட்டும்
கண் முன்னே;
தின்றுக்கொழுத்தால்
நீ காட்டப்போவது எங்கள்
வாழ்விற்கு டா டா என்று!


தலைப்புத் தந்தவர்:
ஆரீஸ் முகம்மது - வடகரை (மாயவரம்) 

8 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

  கவிதை ரசிக்க வைத்தது!

  ReplyDelete
 2. சகோதரர் பாசித் அவர்களுக்கு, கவிதையை ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. பரோட்டா.... இதன் தீமைகளை கவிதை முறையில் சொன்ன சகோ கு வாழ்த்துக்கள்...
  கவிதை இல் சொன்ன அனைத்தும் உண்மை... இனிமேல் உண்பதை குறைத்துக் கொள்ளுவோம்..

  ReplyDelete
 4. இந்தக் கவிதை மாத்திரம் அல்ல எல்லா கவிதைகளுமே உண்மைதான் mums!

  ReplyDelete
 5. பரோட்டாவில் இத்தனை தீமைகளா?

  ReplyDelete
 6. இன்னும் அதிகமாக இருக்கிறது.எழுதினால் கட்டுரையாகிவிடுமோ என்ற அச்சத்திலே சிரித்தோடு நிறுத்திவிட்டேன் ஸாதிகா அவர்களே.

  ReplyDelete
 7. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே

  ReplyDelete