நியாயமில்லை



அன்னையின் கருவில்
உருவெடுக்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;

சுவாசத்தைச் சுவைக்க
என் மனைவியைக்
கதறவைத்து;
கருவீட்டில் இருந்து
நீ எட்டிப்பார்க்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;

எல்லோரும் உன்
அருகில் நின்று
அழகை ரசிக்க;
நான் பெயரைத்
தேர்வுச் செய்து;
களைத்துப்போன உன்
அன்னையுடன் கைப்பேசியில்
கதைக்கும் போது;
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை!

உன் அம்மாச்
சொல்லச் சொல்ல;
எச்சில் சொட்ட அத்தா
என அழைக்கும் போது;
நான் கண்ட மகிழ்ச்சியை
நீ கண்டிருக்க
நியாயமில்லை!

உனக்கு முகம் தெரிந்து;
நான் முன்னே
நிற்கும் போது
எனை மாமா என்று
அழைத்ததுக் கொஞ்சம் கூட
நியாயமில்லை!


அன்னையின் கருவில்
உருவெடுக்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;

சுவாசத்தைச் சுவைக்க
என் மனைவியைக்
கதறவைத்து;
கருவீட்டில் இருந்து
நீ எட்டிப்பார்க்கும் போது
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை;

எல்லோரும் உன்
அருகில் நின்று
அழகை ரசிக்க;
நான் பெயரைத்
தேர்வுச் செய்து;
களைத்துப்போன உன்
அன்னையுடன் கைப்பேசியில்
கதைக்கும் போது;
நீ எனைக்கண்டிருக்க
நியாயமில்லை!

உன் அம்மாச்
சொல்லச் சொல்ல;
எச்சில் சொட்ட அத்தா
என அழைக்கும் போது;
நான் கண்ட மகிழ்ச்சியை
நீ கண்டிருக்க
நியாயமில்லை!

உனக்கு முகம் தெரிந்து;
நான் முன்னே
நிற்கும் போது
எனை மாமா என்று
அழைத்ததுக் கொஞ்சம் கூட
நியாயமில்லை!

4 comments:

 1. வலிகளை தாங்கி நிற்கும் வார்த்தைகள்..

  ReplyDelete
 2. வெளிநாட்டு ஏக்கங்கள் என்று தனி வலை பூவே போடலாம் நீங்கள்

  ReplyDelete
 3. வழமையாக வாழ்த்துக்கள் தெரிவிக்கும் Mums க்கு நன்றி.

  ReplyDelete
 4. நல்லக் கருத்துகளையும் சிறந்த அறிவுரைகளையும் தரும் சூர்யாஜீவா அவர்களே உங்கள் நட்பு என்றும் தொடரட்டும் என்னோடு.

  ReplyDelete