அன்றே உரைத்திருக்கலாம்


சிரத்தை எடுத்து;
கரத்தை நீட்டி;
மருதாணிக் காயும் வரை
அசையாமல் அசையும்
உனைக் கண்டு நகைப்பேன்;
இது ஒரு ஆசையா என!

சின்னதாய் புன்னகைத்து;
கண்சிமிட்டிக் கதைப்பாய்
கலைத்தப்பின்னேப் பார் என!
சிவந்திருந்த வண்ணம்;
ஒளிந்திருந்து உரைக்கும்
உனக்காகத்தான் என!

நெருக்கத்தில் உள்ளப்போது
சுருக்கமாய் தெரிந்த
உன் மருதாணி அழகு;
இன்று தூரமானதும்;
மனம் பாரமாய் ஆனது;
ச்ச்சே!
அன்றே உரைத்திருக்கலாம்
அப்படி ஒர் அழகு என!

சிரத்தை எடுத்து;
கரத்தை நீட்டி;
மருதாணிக் காயும் வரை
அசையாமல் அசையும்
உனைக் கண்டு நகைப்பேன்;
இது ஒரு ஆசையா என!

சின்னதாய் புன்னகைத்து;
கண்சிமிட்டிக் கதைப்பாய்
கலைத்தப்பின்னேப் பார் என!
சிவந்திருந்த வண்ணம்;
ஒளிந்திருந்து உரைக்கும்
உனக்காகத்தான் என!

நெருக்கத்தில் உள்ளப்போது
சுருக்கமாய் தெரிந்த
உன் மருதாணி அழகு;
இன்று தூரமானதும்;
மனம் பாரமாய் ஆனது;
ச்ச்சே!
அன்றே உரைத்திருக்கலாம்
அப்படி ஒர் அழகு என!

7 comments:

  1. அருகில் இருக்கும் போது தான் பாராட்ட மனம் வருவதில்லையே !!!!!!!!!!

    ReplyDelete
  2. பக்கத்தில் இருக்கும் போது பெரிய விஷயம் கூட சிறியதாக இருக்கும்; தூரத்தில் இருக்கும் போதுதான் சிறிய விஷயம் கூட பெரியதாக இருக்கும். அழகானாலும் சரி அழுகையானாலும் சரியே!

    ReplyDelete
  3. படத்தைப் போல கவிதை வரிகளும் அருமை!
    தங்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. காலம் கடத்த
    கடந்த கால
    காவிய காதலில்
    தோன்றீய கவிதையோ..?!

    இந்த பக்கமாக வந்த .Asker.

    ReplyDelete
  5. காலம் கடத்த
    கடந்த கால
    காவிய காதலில்
    தோன்றீய கவிதையோ..?!

    இந்த பக்கமாக வந்த .Asker.

    ReplyDelete
  6. காலம் கடத்த
    கடந்த கால
    காவிய காதலில்
    தோன்றீய கவிதையோ..?!

    இந்த பக்கமாக வந்த .Asker.

    ReplyDelete
  7. இறந்தக் காலத்தை
    கடத்த முடியாமல்;
    நிகழ் காலத்தோடு
    சண்டையிடும்;
    வளைகுடாவின்
    சராசரி குடும்பத்தலைவன்!

    எந்தப் பக்கம் சென்றாலும்
    என் பக்கம் வந்துவிடுங்கள்!
    அஸ்கர் அவர்களே!

    ReplyDelete