விலையேதுமில்லைகறுத்த முடிகள்
களைத்து;
நரைத்தாலும்
இன்னும் மழலையாக;
உன் மடியில்
நான் வீழ்ந்தால்!

காய்ந்துப் போன
உணவும் உன்
பாசத்தில் ஊறி;
என் தொண்டையில்
உருகும் நீ
ஊட்டுவதாய் இருந்தால்!

தலை உருளும்
கவலை வந்தாலும்;
தவிடுப் பொடியாகும்;
உன் விரல்
என் தலையில்
தாலாட்டுப் பாடினால்!

வற்றாத உன் அன்பிற்கு
விலையேதுமில்லை;
வறண்ட உன் கைரேகை
என் முகத்தைக் கீறீனாலும்
அந்த மட்டற்ற
மகிழ்ச்சியிற்கு ஈடேதுமில்லை!


கறுத்த முடிகள்
களைத்து;
நரைத்தாலும்
இன்னும் மழலையாக;
உன் மடியில்
நான் வீழ்ந்தால்!

காய்ந்துப் போன
உணவும் உன்
பாசத்தில் ஊறி;
என் தொண்டையில்
உருகும் நீ
ஊட்டுவதாய் இருந்தால்!

தலை உருளும்
கவலை வந்தாலும்;
தவிடுப் பொடியாகும்;
உன் விரல்
என் தலையில்
தாலாட்டுப் பாடினால்!

வற்றாத உன் அன்பிற்கு
விலையேதுமில்லை;
வறண்ட உன் கைரேகை
என் முகத்தைக் கீறீனாலும்
அந்த மட்டற்ற
மகிழ்ச்சியிற்கு ஈடேதுமில்லை!

5 comments:

 1. அருமை.
  பகிர்வுக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 2. நன்றி தனபாலன் அவர்களே.

  ReplyDelete
 3. அம்மாவின் அன்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை சகோ...

  ReplyDelete
 4. சூர்யஜீவா விற்கும் Mums க்கும் மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete