தபால் பெட்டி


உன்னைத் தொட்டுப்பார்த்து
மகிழ்ந்தக் காலங்கள்
மலையேறி;
உன் இரைப்பைக்குத்
தீனியாய் கடிதங்கள்
போட்டுவிட்டு;
உன் வாயில்
கரம்விட்டுப் பார்த்து;
எட்டாத உயரத்திலும்
எட்டிப்பார்ப்பேன்!

போட்டக் கடிதங்கள்
விழுந்ததா எனச்
செல்லமாய் தட்டிப்பார்ப்பேன்
உன் இடுப்பை!

கழிந்தக் காலங்கள்
கனவாக;
மலிந்துப்போனாலும்
இன்னும் மவுசாக
அராசங்க அலுவலுக்கு;
காதுக்கொடுத்துக் கேட்காத
அலுவலருக்கு நீதான்
எங்களுக்கு ஆறுதல்!

உன்னைத் தொட்டுப்பார்த்து
மகிழ்ந்தக் காலங்கள்
மலையேறி;
உன் இரைப்பைக்குத்
தீனியாய் கடிதங்கள்
போட்டுவிட்டு;
உன் வாயில்
கரம்விட்டுப் பார்த்து;
எட்டாத உயரத்திலும்
எட்டிப்பார்ப்பேன்!

போட்டக் கடிதங்கள்
விழுந்ததா எனச்
செல்லமாய் தட்டிப்பார்ப்பேன்
உன் இடுப்பை!

கழிந்தக் காலங்கள்
கனவாக;
மலிந்துப்போனாலும்
இன்னும் மவுசாக
அராசங்க அலுவலுக்கு;
காதுக்கொடுத்துக் கேட்காத
அலுவலருக்கு நீதான்
எங்களுக்கு ஆறுதல்!

8 comments:

  1. அறிவியல் வளர்ச்சியினால் கடித போக்குவரத்து உறவுகளில் இல்லை என்றாலும்.. அரசாங்க வேலைகளுக்கு அதை தான் நம்ப வேண்டி உள்ளது....
    சிந்தனைக்கு நன்றி...

    ReplyDelete
  2. உங்களுக்கும் நன்றி Mums

    ReplyDelete
  3. அன்புநிறை நண்பரே,
    சபாஷ் போட வைக்கும் கவிதை..
    அறிவியல் தொழில் நுட்பம் வளர்ந்து
    தகவல் தொழில்நுட்பத்தின் ஆரம்பமான
    தபால் பெட்டியை மறைத்தே விட்டது என்றே சொல்லலாம்..
    அதுவும் கைபேசி வந்ததுதான் இதற்கு வினையே...

    இன்னும் அலுவலகங்களுக்கான தூதனாய் மட்டும்
    வாழ்ந்து கொண்டிருக்கிறது...
    அருமை அருமை...

    ReplyDelete
  4. புது வாழ்த்துக்களோடு புகுந்திருக்கும் நண்பர் மகேந்திரன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் என் காதலிக்கு எழுதிய கடிதம் ஹி ஹி .....
    ஒரு நாள் அழவைத்தீர் இன்று .......உன்னை நான் என்ன வென்று சொல்வது

    ReplyDelete
  6. அந்த காலம் ஞாபகம் வந்தது.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    சிந்திக்க :
    "இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

    ReplyDelete
  7. மனம் கமழ்ந்த நன்றிகள் தனபாலன் அவர்களே.

    ReplyDelete
  8. மஹேன் கு நன்றிகள் பல... "என் பக்கம்" வந்தமைக்கு...

    ReplyDelete