வாத்தியாருக்கு எப்படி


முட்டை நல்லது என
வீட்டில் சொல்லி வளர்க்க;
படிப்பில் முட்டைப் போட்டு
எல்லோரும் எனைக்
கண்டு நகைக்க!

மாட்டுத் தொழில்
சிறந்தது என
நண்பர்கள் கதைக்க;
மாடு மேய்க்கக் கூட
லாயிக்கில்லை என
வாத்தியார் உரைக்க!

ஆட்டுப் பண்ணை
பணம் கொழிக்கும்
என அனுபவஸ்தன் சொல்ல;
ஆட்டு மந்தைக்
கூட்டம் என
ஆசிரியர் கொப்பளிக்க!

குழம்பிப்போன நானோ;
புரியாமல் விழித்தேன்;
சத்துள்ள விசயங்களெல்லாம்
எப்படி என் வாத்தியாருக்கு
சொத்தையாகப் போனது என்று!

முட்டை நல்லது என
வீட்டில் சொல்லி வளர்க்க;
படிப்பில் முட்டைப் போட்டு
எல்லோரும் எனைக்
கண்டு நகைக்க!

மாட்டுத் தொழில்
சிறந்தது என
நண்பர்கள் கதைக்க;
மாடு மேய்க்கக் கூட
லாயிக்கில்லை என
வாத்தியார் உரைக்க!

ஆட்டுப் பண்ணை
பணம் கொழிக்கும்
என அனுபவஸ்தன் சொல்ல;
ஆட்டு மந்தைக்
கூட்டம் என
ஆசிரியர் கொப்பளிக்க!

குழம்பிப்போன நானோ;
புரியாமல் விழித்தேன்;
சத்துள்ள விசயங்களெல்லாம்
எப்படி என் வாத்தியாருக்கு
சொத்தையாகப் போனது என்று!

4 comments:

 1. நாம் நல்லா முத்து முத்தா எழுத்துக்கள் எழுதியிருப்போம்.
  தேர்வு அறையில் பரீட்சை எழுதி முடித்ததும் நமக்கே அதை பார்ப்பதற்கு
  ஆவலாக இருக்கும். எதையோ சாதித்தது போல உணர்வோம். நிச்சயம்
  இந்த முறை முழு மதிப்பெண்கள் தான் என்று மனதில் சொல்லிக்கொள்வோம்.

  விடைத்தாள் திருத்தி வரும் போது, நாம் நினைத்ததை விட முறிவான மதிப்பெண்கள் இருக்கும். நாம் எங்கு சிறிய தவறு விட்டோமோ அதை சரியாக
  சுட்டிக்காட்டியிருப்பார் ஆசிரியர். நமக்கு சரியாகத் தோன்றுவதை அவர்கள் விவாதம் செய்வார்கள்.

  வாழ்வின் அழகிய எதிர்பதங்களுடன் இனிய கவிதை
  வடித்தீர்கள். முரண்பாடுகள்.. என்றுமே நிலைத்திருக்கும்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. கவிதையின் வரிகளை ஆழமாக ரசித்து சிறப்பானக் கருத்தை தெரிவித்து இருக்கீர்கள் நண்பர் மகேந்திரன் அவர்களே , உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 3. ந்ல்ல கவிதை..... ந்ல்ல கற்பனை...

  நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

  என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

  ReplyDelete
 4. ரிஸ்வான் அவர்களே உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.உங்களின் தளத்தை தெரியப்படுத்தினால் நானும் உலா வருவேன்.

  ReplyDelete