அழகு ரசம்


எரித்துவிடும் பார்வையுடன்;
புகைத்து நிற்கும் காதுகளுடன்;
உனை முறைத்து நிற்பேன்;
எனக்குப் பிடிக்காத ரசத்தை
நீ பிடித்துக் கொண்டிருக்கையில்!

தேசம் விட்டு; மாற்று
வாசம் கொண்டு - பாசமில்லா
உணவுகளின் பங்காளியாக;
ருசித் தேடி;
பசிக்கொண்டு - உணவு விடுதியின்
படியேறினாலும் ;
பார்க்கமுடியவில்லை உன்
பக்குவமானப் பருப்பு ரசம்!

அழுது உண்ட
மிளகு ரசம் - இன்றுச்
சுவையாய் தெரிந்தது;
ஆனால் உறவுகள்
தூரமாய் இருந்தது!

வெறுப்பான ரசம்;
உவப்பாய் போனது;
உன் கரத்தால்
நீர் அருந்தினாலும் - இனி
மனம் நீர்த்துப்போகாது!

எரித்துவிடும் பார்வையுடன்;
புகைத்து நிற்கும் காதுகளுடன்;
உனை முறைத்து நிற்பேன்;
எனக்குப் பிடிக்காத ரசத்தை
நீ பிடித்துக் கொண்டிருக்கையில்!

தேசம் விட்டு; மாற்று
வாசம் கொண்டு - பாசமில்லா
உணவுகளின் பங்காளியாக;
ருசித் தேடி;
பசிக்கொண்டு - உணவு விடுதியின்
படியேறினாலும் ;
பார்க்கமுடியவில்லை உன்
பக்குவமானப் பருப்பு ரசம்!

அழுது உண்ட
மிளகு ரசம் - இன்றுச்
சுவையாய் தெரிந்தது;
ஆனால் உறவுகள்
தூரமாய் இருந்தது!

வெறுப்பான ரசம்;
உவப்பாய் போனது;
உன் கரத்தால்
நீர் அருந்தினாலும் - இனி
மனம் நீர்த்துப்போகாது!

6 comments:

 1. அழுது உண்ட
  மிளகு ரசம் - இன்றுச்
  சுவையாய் தெரிந்தது;
  ஆனால் உறவுகள்
  தூரமாய் இருந்தது!
  உண்மை

  ReplyDelete
 2. என்னோட fav கு கவிதை.... படைத்த சகோ கு நன்றிகள்!!!!!!

  ReplyDelete
 3. சசிகலா அவர்களுக்கும் Mum அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  ReplyDelete
 4. Please visit
  http://seasonsnidur.blogspot.com/2011/12/blog-post_22.html
  மனமார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 5. மிக்க நன்றி சகோதரர் நீடுர்அலி அவர்களே. உங்களின் வரவை என்பக்கத்தில் எப்போதும் வரவேற்கிறேன்.

  ReplyDelete
 6. மிகவும் அருமை!
  பகிர்விற்கு நன்றி!
  சிந்திக்க :
  "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

  ReplyDelete