விற்பனைக்கு அல்ல


ஆண் மகனின்
பட்டங்கள் கிரயமாக;
எனக்காக நடக்கும்
கருத்துக்கணிப்பு!

வித்தியாசமான விலைகளில்
இளங்காளைகள்
முதுகலையும்
இளங்கலையுமாக!

ஏற்றம் இறக்கும்
கொண்ட ஏலத்தில்
உள்நாடு வெளிநாடு
மாபிள்ளைக் கிராக்கிகள்!

நல்லப் பெண்ணா என்று;
நகையைக் கொண்டு
என்னை எடைப்போடும்;
மதிப்புள்ள நகைக்கு முன்னே;
என் புன்னைகைப்
புண்ணாகிப்போக;
வரவுகள் வாசலைக் கண்டு
நடைப்போடும்!

மென்மையானப்
பெண்மையைச்
சீண்டிப்பார்க்கும் கொடுமை;
தட்சணை என்ற வன்மை!

செலவோடுச் செலவாக;
இனி தொங்கவிடவேண்டும்
கதவுகளில் - நான்
விற்பனைக்கு அல்ல!

ஆண் மகனின்
பட்டங்கள் கிரயமாக;
எனக்காக நடக்கும்
கருத்துக்கணிப்பு!

வித்தியாசமான விலைகளில்
இளங்காளைகள்
முதுகலையும்
இளங்கலையுமாக!

ஏற்றம் இறக்கும்
கொண்ட ஏலத்தில்
உள்நாடு வெளிநாடு
மாபிள்ளைக் கிராக்கிகள்!

நல்லப் பெண்ணா என்று;
நகையைக் கொண்டு
என்னை எடைப்போடும்;
மதிப்புள்ள நகைக்கு முன்னே;
என் புன்னைகைப்
புண்ணாகிப்போக;
வரவுகள் வாசலைக் கண்டு
நடைப்போடும்!

மென்மையானப்
பெண்மையைச்
சீண்டிப்பார்க்கும் கொடுமை;
தட்சணை என்ற வன்மை!

செலவோடுச் செலவாக;
இனி தொங்கவிடவேண்டும்
கதவுகளில் - நான்
விற்பனைக்கு அல்ல!

6 comments:

  1. விற்பனைக்கு அல்ல என போர்டு போடுவது
    நல்ல ஐடியாவாக இருக்கு
    தொடரட்டும் இது போன்ற நல்ல பதிவுகள்

    ReplyDelete
  2. இதுவும் ஒரு வழக்கமான டெம்ப்ளேட் வரதட்சனை கவிதை, ஆண் மகனின் பட்டங்களுக்கும் வேலைக்கும் ஏற்றமாதிரி அவர்களை விற்பதாகவும் வரதட்சனை கேட்பதாகவும் சொல்லப்பட்டாலும் வரதட்சனையே வாங்காமல் திருமணம் செய்ய எத்தனையோ ஆண் மகன்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள் ஏன் பிஇ படிச்சவனோ எம்பிஏ படிச்சவனோ நல்ல வேலை பார்ப்பவனோ மேனேஜராவோ தான் திருமணம் செய்ய வேண்டுமா? வரதட்சணை வேண்டாமென சொல்பவன் ஐடிஐ(IIT அல்ல ITI) படிச்சவனாகவோ சுமாரான வேலையில் இருப்பவனாகவோ இருந்தால் என்னவென்று திருமணம் செய்துக்கலாமே வரதட்சணை தராமல்...

    பெண்கள் பணத்தையும் நகையையும் வரதட்சணையாக தருகிறார்கள் என்றால் ஆண்கள் படிப்பையும் வேலையையும் சம்பளத்தையும் வரதட்சணையாக தருகிறார்கள்...

    வழமையான டெம்ப்ளேட் வரதட்சணை கவிதைகளை படித்து கடுப்பாகி கொலைவெறியில்

    ReplyDelete
  3. சித்திக்January 13, 2011 at 10:02 AM

    மாஷா அல்லாஹ் மிகச் சிறந்த படைப்பு , மப்ரூக் !!

    ReplyDelete
  4. //செலவோடுச் செலவாக;
    இனி தொங்கவிடவேண்டும்
    கதவுகளில் - நான்
    விற்பனைக்கு அல்ல!//

    !

    ReplyDelete
  5. நான்
    விற்பனைக்கு அல்ல!

    அருமையான கவிதை...

    ReplyDelete