எரிச்சல்...


புருவம் இரண்டும்
புடைத்து நிற்க;
பற்கள் அனைத்தும்
ஒட்டிக்கிடக்க;
கண்கள் மட்டும்
சிவந்துக்கிடக்க!

முட்டி நிற்கும்
கோபமும்;
ஈரம் பூத்த
விரல்களும்;
இதயத்துடிப்பை
இழுத்துச்செல்லும்!

உதடுகள்
முணங்கிக்கொண்டே
மெல்லத்திறக்க;
நாவு மட்டும்
நளினமாய் சுழலும்;
எதிரே நிற்பவரின்
முகம் சுருங்கும்!

எரித்தப் பின்னேக்
கரியாய் போகும்;
வாசம் மட்டும்
வாசலில் நிற்கும்;
ஒட்டி வாழும்
உறவுகள் தோற்கும்;
உளச்சலை ஊட்டும்
எரிச்சல் வேண்டாம்!

புருவம் இரண்டும்
புடைத்து நிற்க;
பற்கள் அனைத்தும்
ஒட்டிக்கிடக்க;
கண்கள் மட்டும்
சிவந்துக்கிடக்க!

முட்டி நிற்கும்
கோபமும்;
ஈரம் பூத்த
விரல்களும்;
இதயத்துடிப்பை
இழுத்துச்செல்லும்!

உதடுகள்
முணங்கிக்கொண்டே
மெல்லத்திறக்க;
நாவு மட்டும்
நளினமாய் சுழலும்;
எதிரே நிற்பவரின்
முகம் சுருங்கும்!

எரித்தப் பின்னேக்
கரியாய் போகும்;
வாசம் மட்டும்
வாசலில் நிற்கும்;
ஒட்டி வாழும்
உறவுகள் தோற்கும்;
உளச்சலை ஊட்டும்
எரிச்சல் வேண்டாம்!

No comments:

Post a Comment