என் கவிதை


எரிச்சல் கொண்ட
உள்ளத்திற்கு
எரிச்சல் கொடுக்கும்
வரிகளாய் தோன்றும்!

மூடிக்கிடக்கும் சோகங்களைத்
தோண்டிப் பார்க்கும்
அர்த்தம்!

வருத்தம் காணும்
விழிகளுக்குப்
பொருத்தமாய்
நீர் துளிகள்!

வலிகள் உணர்ந்துப்;
பலியாகி இருக்கும்
ஊமைக் காயங்களுக்குப்;
பிரிந்துவாழும் இதயங்களுக்குப்
பரிந்துபேசும் வரிகள்!

விமர்சனங்கள்;
சில நேரங்களில்
விமர்சினமாய்;
ரணமாய் வந்தாலும்;
குணமாக்கும் சிலருக்கு
என்பதால்
வரிகள் அழுவதை
நிறுத்த இயலவில்லை!

எரிச்சல் கொண்ட
உள்ளத்திற்கு
எரிச்சல் கொடுக்கும்
வரிகளாய் தோன்றும்!

மூடிக்கிடக்கும் சோகங்களைத்
தோண்டிப் பார்க்கும்
அர்த்தம்!

வருத்தம் காணும்
விழிகளுக்குப்
பொருத்தமாய்
நீர் துளிகள்!

வலிகள் உணர்ந்துப்;
பலியாகி இருக்கும்
ஊமைக் காயங்களுக்குப்;
பிரிந்துவாழும் இதயங்களுக்குப்
பரிந்துபேசும் வரிகள்!

விமர்சனங்கள்;
சில நேரங்களில்
விமர்சினமாய்;
ரணமாய் வந்தாலும்;
குணமாக்கும் சிலருக்கு
என்பதால்
வரிகள் அழுவதை
நிறுத்த இயலவில்லை!

No comments:

Post a Comment