ஒதுங்கி நிற்கும் நீ..


வருடத்திற்கு ஒரு முறை
என் வரவு என்பதால்;
மிரண்டுப் போய் நீ!

மறந்துவிட்டாய்
என அறிந்தும்;
அழைத்துப் பார்ப்பேன்-உன்
அன்னை அதட்டிப் பார்ப்பாள்!

இனிப்புகள் கொடுத்து
கரம் நீட்டினாலும்;
அன்னையின் இடுக்கில்
நின்று கரம் நீட்டுவாய்
இனிப்பிற்காக மட்டும்!

கண்டிக்கும் பிழை
நீ செய்தாலும்;
உன்னைத் தண்டிக்க
மனம் வராது;
ஒதுங்கி நிற்கும் நீ
என்னை ஒதுக்கிவிடுவாயோ
என்றெண்ணி!

வருடத்திற்கு ஒரு முறை
என் வரவு என்பதால்;
மிரண்டுப் போய் நீ!

மறந்துவிட்டாய்
என அறிந்தும்;
அழைத்துப் பார்ப்பேன்-உன்
அன்னை அதட்டிப் பார்ப்பாள்!

இனிப்புகள் கொடுத்து
கரம் நீட்டினாலும்;
அன்னையின் இடுக்கில்
நின்று கரம் நீட்டுவாய்
இனிப்பிற்காக மட்டும்!

கண்டிக்கும் பிழை
நீ செய்தாலும்;
உன்னைத் தண்டிக்க
மனம் வராது;
ஒதுங்கி நிற்கும் நீ
என்னை ஒதுக்கிவிடுவாயோ
என்றெண்ணி!

1 comment: