அவன் அப்படித்தான்..


போர்த்தியிருக்கும்
ஆடையைக் கண்டு;
புருவம் சுளிக்கும்;

இடையில் தெரியும்
இடையைக் கண்டு;
இமைச் சிமிட்டும்!

சேலையை விலக்கும்
காற்றைக் கண்டு;
உதடுகள் போகும்;
செவியின் பக்கம்!

எச்சம் கொண்ட
விழிகள் இரண்டும்;
வலை வீசும்
மகளிர் கண்டு!

அக்காள் தங்கைக்குச்
சிறையாய் இருந்து;
அன்னைக்கு அரணாய் இருந்து;
மனைவிற்கு உறையாய் இருந்து;
அடுத்தப் பெண்டிற்கு மட்டும்
அவலாசைக் கொள்ளும்
ஆண் மகன்!

போர்த்தியிருக்கும்
ஆடையைக் கண்டு;
புருவம் சுளிக்கும்;

இடையில் தெரியும்
இடையைக் கண்டு;
இமைச் சிமிட்டும்!

சேலையை விலக்கும்
காற்றைக் கண்டு;
உதடுகள் போகும்;
செவியின் பக்கம்!

எச்சம் கொண்ட
விழிகள் இரண்டும்;
வலை வீசும்
மகளிர் கண்டு!

அக்காள் தங்கைக்குச்
சிறையாய் இருந்து;
அன்னைக்கு அரணாய் இருந்து;
மனைவிற்கு உறையாய் இருந்து;
அடுத்தப் பெண்டிற்கு மட்டும்
அவலாசைக் கொள்ளும்
ஆண் மகன்!

No comments:

Post a Comment