என் ஈரக்குலை


வெடிச் சத்தம் மட்டும்
தினம் துணையாய்;
பிணங்களால் இடம்
நெருக்கடியாய்;
ஓலம் மட்டும்
முதல் மொழியாய்;
உலக நாடுகள்
இதற்கு உறுதுணையாய்;
அப்பாவிகள் நாங்கள்
பாலஸ்தீனியர்களாய்!

விழிகளுக்குத் திரையிட்டு
வழிகளை அடைத்துக்கொண்டு;
பிணந்திண்ணி நாடுகள்
பறைச்சாற்றும்;
எங்களின் மீதே
குற்றம் சாட்டும்!

விதைகள்
வேர் விடுவதற்கு முன்னே;
விழுந்துவிடும்;
நிலங்கள் குருதிகளால்;
குளித்துவிடும்!

தட்டிக்கேட்க யாருமில்லை;
தடுத்து நிறுத்த மனமில்லை;
குரல்கொடுக்க எவருமில்லை;
கொடுக்கும் எவருக்கும்
மண்ணில் இடமில்லை!

வெடிச் சத்தம் மட்டும்
தினம் துணையாய்;
பிணங்களால் இடம்
நெருக்கடியாய்;
ஓலம் மட்டும்
முதல் மொழியாய்;
உலக நாடுகள்
இதற்கு உறுதுணையாய்;
அப்பாவிகள் நாங்கள்
பாலஸ்தீனியர்களாய்!

விழிகளுக்குத் திரையிட்டு
வழிகளை அடைத்துக்கொண்டு;
பிணந்திண்ணி நாடுகள்
பறைச்சாற்றும்;
எங்களின் மீதே
குற்றம் சாட்டும்!

விதைகள்
வேர் விடுவதற்கு முன்னே;
விழுந்துவிடும்;
நிலங்கள் குருதிகளால்;
குளித்துவிடும்!

தட்டிக்கேட்க யாருமில்லை;
தடுத்து நிறுத்த மனமில்லை;
குரல்கொடுக்க எவருமில்லை;
கொடுக்கும் எவருக்கும்
மண்ணில் இடமில்லை!

No comments:

Post a Comment