பாரமாய் நான்..


உனக்கு விவரம்
தெரியா வயதில்;
அள்ளி அணைத்து;
முகர்ந்துப்பார்த்து
மூச்சுவிடுவேன்!

மெத்தை முழுதும் உன்
வித்தை நனைத்தாலும்;
சிரித்துக்கொண்டே
வாரியணைப்பேன்!

என் தோள்கள்
உனக்கு நாற்காலியாகவும்;
விரல்கள் உனக்கு
வழித்துணையாகவும்!
உன் கல்விற்குக்
கடல்கடந்து;
நீயோ என் முகம் மறந்து;
கடிதங்களில் உன் கிறுக்கல்கள்;
மலைப்பாக எனக்கு!

ஒய்வுப்பெற்று
ஓரமாய் நான் இன்று;
என் அறிவுறைகளை
உன் செவிகளின் சவ்வுகளும்
கதவைச் சாத்திக்கொள்ள;

கனத்தாலும் என்
தோள்கள் இறக்கிவிடாது
உன்னை அன்று;
ஒரமாய் இருந்தாலும்
பாரமாய் இன்று நான்;
உனக்கும் உன்
மனைவிற்கும்!

உனக்கு விவரம்
தெரியா வயதில்;
அள்ளி அணைத்து;
முகர்ந்துப்பார்த்து
மூச்சுவிடுவேன்!

மெத்தை முழுதும் உன்
வித்தை நனைத்தாலும்;
சிரித்துக்கொண்டே
வாரியணைப்பேன்!

என் தோள்கள்
உனக்கு நாற்காலியாகவும்;
விரல்கள் உனக்கு
வழித்துணையாகவும்!
உன் கல்விற்குக்
கடல்கடந்து;
நீயோ என் முகம் மறந்து;
கடிதங்களில் உன் கிறுக்கல்கள்;
மலைப்பாக எனக்கு!

ஒய்வுப்பெற்று
ஓரமாய் நான் இன்று;
என் அறிவுறைகளை
உன் செவிகளின் சவ்வுகளும்
கதவைச் சாத்திக்கொள்ள;

கனத்தாலும் என்
தோள்கள் இறக்கிவிடாது
உன்னை அன்று;
ஒரமாய் இருந்தாலும்
பாரமாய் இன்று நான்;
உனக்கும் உன்
மனைவிற்கும்!

2 comments:

  1. சிறப்பான கவிதை. படித்து முடிக்கையில் மனதிற்குள் ஏதோ பாரமாய்..

    ReplyDelete
  2. கடைந்தெடுத்து செதுக்கிய அழகிய வரிகள்.

    ReplyDelete