வெளிநாட்டு வேலை



பழைய நினைவுகள்
தூசுப்படிந்துக்;
காசுக்காக தேசம் கடந்துப்;
பள்ளி நண்பர்களும்;
கல்லூரி தோழர்களும்;
அலைவரிசையில்
அலையடிக்கும்;
எப்போதாவது
உள்ளத்திற்கு மகிழ்ச்சியாய்
குளிர் அடிக்கும்!

வெயிலும் பனியும்
நம் சருமத்திடம்
சரணடைந்து;
பெற்றோரின் விரலுக்கு
நம் காதுச் சமர்ப்பணமாய்;
திருகி விளையாட!

குளியலுக்காக
வாய்க்காலையும்;
வரப்புகளையும்
வலைவீசித் தேடி;
ஓடியப் பாதங்கள்;
ஓய்வாக இன்று!

என் வியர்வைகள்
குளிர்சாதனப்பெட்டிற்கு
வெட்கப்பட்டு;
மேனியில்
மறைந்துப்போய்;
வியர்வை என்பதே
மறந்துப்போய்!

கணிணிக்குக் கண்கள்
அர்ப்பணமாய்;
உடல்கள் சுற்றும்
நாற்காலிக்கு
மெத்தனமாய்!

உறவுகள்
கடலுக்கு அப்பால்;
மாதா மாதம்
பணம் மட்டும்
பயணம் செல்லும்;


பழைய நினைவுகள்
தூசுப்படிந்துக்;
காசுக்காக தேசம் கடந்துப்;
பள்ளி நண்பர்களும்;
கல்லூரி தோழர்களும்;
அலைவரிசையில்
அலையடிக்கும்;
எப்போதாவது
உள்ளத்திற்கு மகிழ்ச்சியாய்
குளிர் அடிக்கும்!

வெயிலும் பனியும்
நம் சருமத்திடம்
சரணடைந்து;
பெற்றோரின் விரலுக்கு
நம் காதுச் சமர்ப்பணமாய்;
திருகி விளையாட!

குளியலுக்காக
வாய்க்காலையும்;
வரப்புகளையும்
வலைவீசித் தேடி;
ஓடியப் பாதங்கள்;
ஓய்வாக இன்று!

என் வியர்வைகள்
குளிர்சாதனப்பெட்டிற்கு
வெட்கப்பட்டு;
மேனியில்
மறைந்துப்போய்;
வியர்வை என்பதே
மறந்துப்போய்!

கணிணிக்குக் கண்கள்
அர்ப்பணமாய்;
உடல்கள் சுற்றும்
நாற்காலிக்கு
மெத்தனமாய்!

உறவுகள்
கடலுக்கு அப்பால்;
மாதா மாதம்
பணம் மட்டும்
பயணம் செல்லும்;

4 comments:

  1. குளிர்சாதனப் பெட்டிக்கு வெட்கப்படும் வியர்வைகள்
    வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள்.
    நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. யாசர் அவர்களே உங்கள் கவிதைகள் என் பழைய நினைவுகளை தட்டி எழுப்புகிறது......அடுத்தவர்களின் தூக்கத்தை தொந்தரவு பண்ணுவதில் உங்களுக்கு ஆனந்தமோ??

    ReplyDelete
  4. அதே தூக்கத்தை நானும் இழந்தவன் என்ற உரிமையில்தான்

    ReplyDelete