மெளனம்


தெரியாதப் பதிலால்;
விழிகள் நடனமாட;
உயராத ஒலியால்
மெளனமாய் நிற்க;
முகம் சிவக்கும்
எதிர் இருப்பவருக்கு!

ஒத்துக்கொண்டக்
காரியத்திற்கு;
உதடுகள் இரண்டும்
உரிந்து நிற்க;
மெளனமான மொழியால்;
முகம் மலறும்;
எதிர் இருப்பவருக்கு!

பொங்கி வரும்
சினத்திற்கு;
முட்டுக்கட்டையாய்
முழுங்கி நிற்கும்
வார்த்தைக்கு;
மெளனமாய் இருந்து
மூக்கை உடைப்போம்
எதிர் இருப்பவருக்கு!

தொண்டையில்
சிக்கியக் காற்றும்;
எழாத நாவும்;
ஒலிக்குச் சரணடைந்து
மெளனம் என்றப் பாஷையாக!

பேசுகின்ற இடத்தில்
மொழியால் பதில் அளிப்போம்;
தேவையில்லா இடத்தில்
மெளனமே பாஷையாக்குவோம்!

தெரியாதப் பதிலால்;
விழிகள் நடனமாட;
உயராத ஒலியால்
மெளனமாய் நிற்க;
முகம் சிவக்கும்
எதிர் இருப்பவருக்கு!

ஒத்துக்கொண்டக்
காரியத்திற்கு;
உதடுகள் இரண்டும்
உரிந்து நிற்க;
மெளனமான மொழியால்;
முகம் மலறும்;
எதிர் இருப்பவருக்கு!

பொங்கி வரும்
சினத்திற்கு;
முட்டுக்கட்டையாய்
முழுங்கி நிற்கும்
வார்த்தைக்கு;
மெளனமாய் இருந்து
மூக்கை உடைப்போம்
எதிர் இருப்பவருக்கு!

தொண்டையில்
சிக்கியக் காற்றும்;
எழாத நாவும்;
ஒலிக்குச் சரணடைந்து
மெளனம் என்றப் பாஷையாக!

பேசுகின்ற இடத்தில்
மொழியால் பதில் அளிப்போம்;
தேவையில்லா இடத்தில்
மெளனமே பாஷையாக்குவோம்!

4 comments:

 1. உரத்த சிந்தனை.ஆம் தேவையற்ற இடங்களில்
  மௌனமே சிறந்த மொழி
  தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. யாசர். உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

  ReplyDelete
 3. சில நேரங்களில் மௌனங்களே ஆயிரம் கதைகள் சொல்வதுண்டு

  ReplyDelete
 4. சரியாகச் சொன்னீர்கள் Mums.

  ReplyDelete