மாமியார் வீடு


விழியில்
நிரம்பிய நீரை
வெளியேற்றும் இமைகள்;
விரல் பிடித்தப் பேனாவும்;
சோகங்களைக் கக்க!

பரிட்சயம் ஆகாத
உன் குடும்பத்துடன்;
நான் பலப்பரீட்சையில்
தனிமையாக;
தனிமையோடு உறவாட!

மாதத்தில்
வளைகுடா நீ சென்று விட;
என்னை
வளைத்து வைத்துத்
துளைத்து எடுக்கும்
உறவுகளின் வினாவினால்
விக்கித்து நிற்க;
பதில் அளிக்க நான்
வக்கற்றுப்போக!

அழுதுவிட்டு
அயர்ந்துத் தூங்கவே
நடு நிசியை எட்டிவிட;
விழித்துப்பார்த்து;
உன் உறவுகளின்
முகத்தில் விழிக்க
என் கால்கள் நடுங்கும்!

வார்த்தைச்
செவியில் விழுந்துச்;
செவில்களில்
அறைந்துவிடுமோ;
இது அம்மா வீடல்ல என்று!

விழியில்
நிரம்பிய நீரை
வெளியேற்றும் இமைகள்;
விரல் பிடித்தப் பேனாவும்;
சோகங்களைக் கக்க!

பரிட்சயம் ஆகாத
உன் குடும்பத்துடன்;
நான் பலப்பரீட்சையில்
தனிமையாக;
தனிமையோடு உறவாட!

மாதத்தில்
வளைகுடா நீ சென்று விட;
என்னை
வளைத்து வைத்துத்
துளைத்து எடுக்கும்
உறவுகளின் வினாவினால்
விக்கித்து நிற்க;
பதில் அளிக்க நான்
வக்கற்றுப்போக!

அழுதுவிட்டு
அயர்ந்துத் தூங்கவே
நடு நிசியை எட்டிவிட;
விழித்துப்பார்த்து;
உன் உறவுகளின்
முகத்தில் விழிக்க
என் கால்கள் நடுங்கும்!

வார்த்தைச்
செவியில் விழுந்துச்;
செவில்களில்
அறைந்துவிடுமோ;
இது அம்மா வீடல்ல என்று!

1 comment:

  1. இது அம்மா வீடல்ல
    இந்த ஒரு வரியே நிறையச் சொல்லுகிறது
    நல்ல படைப்பு.வாழ்த்துக்கள்

    ReplyDelete