துரோகம்..


கரம் இட;
தோளுக்கு
ஆள் பிடித்து;
அந்த ஆளுக்கு
எனைப் பிடிக்கப்;
பஞ்சணையாய்
பாசாங்குச் செய்து;
வஞ்சம் வைக்க;
தஞ்சம் கொள்வேன்;
நம்பியோரின் உறவுக்கு
நஞ்சிட்டுக் கொல்வேன்!

துர் தாகம்
ஊற்றெடுக்க;
துரோகங்கள் பீறிட;
அசையாத மனதையும்
ஆட்டிவைப்பேன்;
என் பக்கம்
தலையாட்ட வைப்பேன்!

கறுத்த விழிகளில்;
பளிச்சிடும் ஆசைகளைப்;
பதவியாய்;பணமாய்;
தோற்றம் கொடுத்துத்;
தோற்கச் செய்வேன்
நட்பினையும்
உறவினையும்
உதறச் செய்வேன்;
பாதிக்கப்பட்டவனைக்
கதறச் செய்வேன்!

கரம் இட;
தோளுக்கு
ஆள் பிடித்து;
அந்த ஆளுக்கு
எனைப் பிடிக்கப்;
பஞ்சணையாய்
பாசாங்குச் செய்து;
வஞ்சம் வைக்க;
தஞ்சம் கொள்வேன்;
நம்பியோரின் உறவுக்கு
நஞ்சிட்டுக் கொல்வேன்!

துர் தாகம்
ஊற்றெடுக்க;
துரோகங்கள் பீறிட;
அசையாத மனதையும்
ஆட்டிவைப்பேன்;
என் பக்கம்
தலையாட்ட வைப்பேன்!

கறுத்த விழிகளில்;
பளிச்சிடும் ஆசைகளைப்;
பதவியாய்;பணமாய்;
தோற்றம் கொடுத்துத்;
தோற்கச் செய்வேன்
நட்பினையும்
உறவினையும்
உதறச் செய்வேன்;
பாதிக்கப்பட்டவனைக்
கதறச் செய்வேன்!

No comments:

Post a Comment