ஓப்பீடு..


மனம் நொறுங்கி;
தினம் அழுது;
பண வீக்கத்தால்
பாலைவனத்தில்;

இளமையை
இறுக்கப்பிடித்து;
கைப்பிடித்தவளோ
கரைக்கு அப்பால்!

இமை நனைந்து;
இதயம் அழ;
தந்தையிடம்
தளர்ந்தக் குரலில்;
தகவலோடு நான்!
 
புலுங்கியது;உள்ளம்
குலுங்கியதுப் போதும்;
தொலைபேசியில்
தொலைத்த உறவுகள்
எங்கே;
உங்கள் முகம் பார்த்து
ஊதியம் பெறமுடியாதா
அங்கே;
   
தந்தையின் சர்வச்
சாதாரணமான விடை;
ரணமாய் நெஞ்சில்;
என் காலத்தில்;
உன் அம்மாவிற்கு கடிதம்
சேரவே வாரங்கள் ஆகும்!
அழுது வடியும்
எழுத்திற்கு
உடைந்து அழும் குரல்
எவ்வளவோ மேல்!

மனம் நொறுங்கி;
தினம் அழுது;
பண வீக்கத்தால்
பாலைவனத்தில்;

இளமையை
இறுக்கப்பிடித்து;
கைப்பிடித்தவளோ
கரைக்கு அப்பால்!

இமை நனைந்து;
இதயம் அழ;
தந்தையிடம்
தளர்ந்தக் குரலில்;
தகவலோடு நான்!
 
புலுங்கியது;உள்ளம்
குலுங்கியதுப் போதும்;
தொலைபேசியில்
தொலைத்த உறவுகள்
எங்கே;
உங்கள் முகம் பார்த்து
ஊதியம் பெறமுடியாதா
அங்கே;
   
தந்தையின் சர்வச்
சாதாரணமான விடை;
ரணமாய் நெஞ்சில்;
என் காலத்தில்;
உன் அம்மாவிற்கு கடிதம்
சேரவே வாரங்கள் ஆகும்!
அழுது வடியும்
எழுத்திற்கு
உடைந்து அழும் குரல்
எவ்வளவோ மேல்!

No comments:

Post a Comment