வீடியோப் போஸ்..


வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;

வெட்கத்தைப்
படம்பிடித்துக் காட்ட;
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே;
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே;
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்
மணவாளனுக்காக;
வாசம் வீசுவதற்கு முன்னே;
ரசித்து எடுக்க
வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்;
குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்;
ஒதுங்கிக் கிடக்கும்
முந்தாணியும் தப்பாமல்
ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த உறவுகளை
விழிகளில் அடைக்க;
திருமண வீடியோக்கள்;
வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்;
அனைவரும் கண்டுக்களிக்க;
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க;
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்;

4 comments:

 1. சமபந்தி போஜனம் நல்ல உவமை
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. அன்பு மிகு -யாசர் அரஃபாத் அவர்களுக்கு நான் நீங்கள் விரித்த வலையில் விழுந்து விட்டேன் ஆனால் என்னை அன்புடன் நேசித்து வாழ்த்தி அல்லாஹ்விடம் நம் அனைவர்க்கும் துவா கேளுங்கள் . அன்புடன் முஹம்மது அலி ஜின்னாஹ்
  நான் விரித்த வலையில் விழ
  http://nidurseasons.blogspot.com/2011/01/takbir-eraiva-by-salaam-express.html
  TAKBIR தக்பீர்-இறைவா by சலாம் எக்ஸ்பிரஸ் (Eraiva by Salaam Express)
  Please try to give your valuable comment in the post

  ReplyDelete
 3. சித்திக்January 13, 2011 at 11:12 AM

  பிறர் கண்களுக்கு விருந்து படைப்பது , அருமையான சிந்தனை !!

  ReplyDelete